பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 25i

வணங்கி நடுவர் அமர்ந்ததும் அமர்ந்தனர். நடுவரை ஏற்கும் இசைவாக இக்குறிப்பு அமைந்தது.

நடுவர் அடிகளார் தம் தனித்தன்மை வாய்ந்த முறையில் முன்னுரை நிகழ்த்தி இரு தலைப்புகளையும் விளக்கினார். அணியினர் அமர, கருத்துப்போர் துவங்கியது . முறையாகவும், நெறியாகவும் அணித் தலைவர்களும் தக்க சான்றுகள் காட்டி வழக்குரைத்தனர். அணித்தலைவர் இருவரும் சொல்லாற்றலும், புலமைத் தெளிவும் உடையவர்கள் . எனவே, மிகக் கண்ணியமுள்ள கருத்துரைகளாக அமைந்தன . இரண்டு அணியினரும் உரையாற்றி அமர்ந்தனர். நடுவர் அடிகளார். இதனை முதற் சுற்றுக் கருத்துப்போர் என்று அறிவித்து அடுத்து முதலில் அறைகூவித் தொடங்கிய அணித்தலைவருக்கு இறுதியில் தொகுத்துரைக்கும் வாய்ப்பளித்து உரையாற்றக் கூறினார். இருவரும் தொகுப்புரையும் கருத்துரையும் கூற நடுவர் கருத்துரையாற்றத் துவங்கினார்.

இந்நேரத்தில் சிறப்பு அவையினர் தம் கருத்தை வாக்கு மூலம் தரும் குடவோலை முறை அமைதியாக நிகழ்ந்தது. வண்ணக் கோலத்துடன் ஒப்பனை செய்யப்பட்ட குடம் ஒன்றை ஒருவர் பிடித்து அவையோர் முன் கவிழ்த்து உள்ளே கைவிட்டுத் துழாவிக் காட்டினார் ஒருவர் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டு குடத்திற்கு முன்னே சென்று வாக்குச் சிட்டு ஒன்றை அவை உறுப்பினர்க்கு வழங்கினார். அதில் சமயத்தால் தமிழ் வளர்ந்தது என்று ஒரு வரியும் தமிழால் சமயம் வளர்ந்தது என்று மறுவரியும்