பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 253

நடுவரவர்கள் இதன் நோட்டவுரையாக,

“என் கருத்தளவிலும், வாதிட்டோர் வைத்த கருத்தள விலும் சமயந்தான் தமிழை வளர்த்தது என்பது என் முடிவாயினும் சிறப்பவையின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பெருந்தகவுடன் அறிவித்தார்கள். எதிர் அணித்தலைவரும் இவ்வாறே ஏற்றார் . தமிழால் சமயம் வளர்ந்தது’ என்னும் கொடி மட்டும் நாட்டப் பட்டது . தீர்ப்புக் கருத்து நாகைத் தமிழ்ச்சங்கப் பதி வேட்டில் பதியப்பட்டு நடுவர், இரண்டு அணியினர் இயக்குநர் கைச்சான்றுகளுடன் சிறப்புப் பேரவை நூற் றவரின் கைச்சான்றுகளும் இடப்பட்டன.

இந்நிகழ்ச்சியாம் பட்டி மண்டபம் நாடகப் பாங்கில் நிகழ்ந்தது . இதனால் முற்காலப் பட்டி மண்டப நடை முறைகள் மக்கள் முன் வைக்கப் பெற்று பயன் விளைந்தது. கருத்துப் பதிவு அமைந்தது. உண்மையாகவே நாகைப் பெரு மக்கள் நல்ல கருத்துரைகளைப் பெற்றனர். சமயம் தமிழால் வளர்ந்தது’ என்பது மேவி நின்ற பயன் தெரிந்தது.

பட்டி மண்டப வரலாற்றின் இஃதொரு பொன்னான பதிவு விளைச்சலாயிற்று.

இல்தொரு புதுமையானதும் நல்ல பயன் தந்த நிகழ்ச்சியுமாதலால் சற்று விரிவாகக் காணப்பட்டது.