பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [T] 261

பொழிந்தனர். மொழித்தொண்டே அணித்தலைவர் தாம் பங்குகொள்ளும் பாட்டரங்குகளில் எழுதிப் படிக்காமல் பொழிவதையே கொண்டமையால் முழுமையும் பாடல் களாகப் பொழிந்தார்.

வீரம் அணித்தலைவர் பின் மறுப்புரையிலும், தொகுப்புரையிலும் பாப்பொழிவே இயற்றினார்.

நடுவர் பாவலர் ஏறுபெருஞ்சித்திரனார் தம்வீறார்ந்த பாத்திறம் பெய்து மொழித்தொண்டே என்று தீர்ப் பளித்தார்.

விழாத் தலைமையாலும் அவைப் பெருமையாலும், கவிஞர்களாலும் இது சிறப்புக்குரிய நல் விளைச்சல் ஆயிற்று.

சிலைநிறுவ, தாமொருவராய் முனைந்து நிறை வேற்றிய திருவாரூர் புலவர் சரவணத்தமிழன் அவர்கள் பாராட்டுக்குரியவரானார். இவர் தனித்தமிழ்ச் செயலினர்.

எழுத்துப் பட்டி மண்டபம்

சொற்பொழிவு, உரையாடல் மூலம் நிகழும் பட்டி மண்டபம் போன்று சிறு சிறு கட்டுரைகளாக எழுதிக் கருத்துப் போரிடும் பட்டி மண்டபம் ஒன்றும் நிகழ்ந்தது.

நாகைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நாகபட்டினத்தில் நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் முழுஉருவ வெண்கலச் சிலை நாட்டப்பெற்றது.