பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 | பட்டி மண்டப வரலாறு

அருள் முதலிய குணங்கள் அழுத்தம் பெற்றன . சமுதாயத் கருத்துள்ள நிகழ்ச்சிகள் மக்களால் நயத்துடன் ஏற்கப் பட்டுள்ளன. வாழ்க்கையில் இதனால் நன்னெறி கொண்ட தாகவும்,பு துப்பாதைகொண்டதாகவும்பலர்அறிவித்தனர். இவை அனைத்துப் பாங்கமைந்த பட்டி மண்டபங்களால் விளைந்தவை.

குழப்பத்தில் குயீர் சிரிப்பு

சுவைகளில் நகைச்சுவை, பட்டி மண்டபத்தில் ஏறிப் புகுந்து காலூன்றி நின்று மகிழ்வித்தது . இது வளர்ந்து பெருகியது. சிறுநிகழ்ச்சிகளும், கதைகளும் இதற்காக இடம் பெற்றன. கற்பனையில் உதிர்ந்தன . நேருக்குநேர் தாக்கிக் கொள்வதிலும் பளிச்சிட்டன . நகைச்சுவைகளும் மிகுந்து வருகின்றன.

இத்துறையில் எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் காட்ட வேண்டும்.

பட்டி மண்டப நகைச்சுவை அரசாகப் பெயர் பெற்றவர்முனைவர் அ. அறிவொளி. இவர் நகைச்சுவையில் புதிய உத்தியை உருவாக்கினார் . மாறுபட்ட பின்னலான கருத்துக்களைச் சுற்றலான சொற்றொடர்களால் கூறுவார். அவையோர் என்ன சொல்கிறார் என்றுவிழிப்பர். இப்படி ஒரு குழப்பத்தை எழுப்புவார் . ஒரு கூர்முனையில் அப் புதிரை விடுவித்து அவையில் குயிர் சிரிப்பை

வரவழைப்பார் . இஃது அமையாத பட்டி மண்டயமோ,