பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல்

ஓங்கி ஓங்கி அடித்தான் இறங்கவேயில்லை அண்ணன் பார்த்தான்; தம்பி கூர் பக்கத்தைச் சுவரில் வைக்காமல், முட்டாளே! கொண்டைப் பக்கத்தைச் சுவரில் வைத்து அடித்தால் எப்படியடா பதியும்() என்று தம்பியின் மடமையை எடுத்துக் காட்டினான். அண்ணன் தொடர்ந்தான் : முட்டாப்பயலே இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கவேண்டிய ஆணியடா கூரை எந்தப் பக்கம் வைத்தாய்? என்று அவையில் வெடிச் சிரிப்புடன் தன் அறியாமை யையும் காட்டினான் அண்ணன்’ என்று பேச்சாளர் சொல்லி அந்த அண்ணன்தான் எதிர்க்கட்சிக்காரர்’ என்பார் . எதிர்க்கட்சிக்காரர், ஆமாம், தம்பி சொல்வது சரிதான்’ என்பார் . அவையோருக்குச் சுவைதர இருவரும் தம்மை முட்டாள்களாக நடித்துக் கொள்வர்.

இது நாகூர் இரட்டையர் புலவர் சீனி , சண்முகம் புலவர் இர. சண்முகவடிவேலு ஆகிய இருவரது கதைப்பு. - பட்டி மண்டப நிகழ்ச்சி பரவலாகப் பெருகி. நிலையில் அதில் ஒருவளர்ச்சியாகமேல்முறையீடுதோன்றி, அதற்கு மேலும் சூடுபிடிக்க வழக்காடு மன்றம் தோன்றி வளர்ந்தது. இப்போதைய நிலையில் வழக்காடு மன்றமே சிறப்புற்றுள்ளது.

ஒப்பனையில் சொற்போர் -

இதற்கு மேலும் ஒரு கவர்ச்சி மண்டபம் தோன்றிற்று. குற்றம் சாற்றப்படுவோரும் குற்றத்திற்கு மாற்று கூறுவோரு