பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 285

என்று சிறப்பாகப் பழம்பெரும் நிலைகொண்டு குறித்தார். ஆனால், இதற்கு உரைவிளக்கம் தந்த பாரதியார்,

“வீரர்தம் போரின் அரிய நற்சாத்திர வாதங்கள் ஆயுதங்களுடன் செய்யப்படும் உடற்போரினைக் காட்டிலும் பண்டிதர் செய்யும் சாத்திர வாதங்கள் அருமை உடையன என்பது”

என்று அருமை கூறியவர். அடுத்து, இதன் கருத்தை விளக்கத் தொடங்கி, - . .

“கருத்து, அதாவது உண்மையுடன் இவ்வாதங்கள் நடைபெறுமிடத்து என்க. உண்மையறியாதார், உண்மை வேண்டாதார் செய்யும் வாதங்கள் சந்தை யில் மீன் விற்கும் ஸ்திரிகளின் போராட்டத்திற்கு (?நராகும்” என்றார். -

முன் சிறப்பித்தது பழைமை நிலையை, பின் மீன் விற்போர் அங்காடி வாயாடியை ஒப்பிட்டது அவர் காலத்துப் பட்டி மண்டப நிலையாகவும் அமையும்.

‘மனோன்மணியம் ஆசிரியர்

“வார்த்தை கத்தும் வாதியர்கள் மன்றனைத்தும் வறிதே என்று சிவகாமி தன் காதலனைத் தேடிய இடங் களைக்குறிக்கப்பாடப்பட்டது. வார்த்தைகத்தும்வாதியர் உள்ள பட்டி மண்டபமும் தன் காதலனைக் காணமுடியாது