பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 31

யக்ஞவல்கியன் வாதம் செய்த நிகழ்ச்சியில் மற்றொன்றையும் அறிய வேண்டியுள்ளது. அவன் கார்க்கி யைக் கருத்துவன்மையால் வெல்லவில்லை. கார்க்கி விடுத்த அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் விழித்தான் யக்ஞவல்கீயன் தடுமாறினாலும் தன்மூப்பை விடாமல் சொன்னான் :

“இனி அடுத்தொருவினா கேட்பாயானால் உன் தலை அறுபடும்” என்றான் கேட்ட கார்க்கி நிலைமையைப் புரிந்துகொண்டாள். தலை அறுந்துவிழும்'என்றது, அவன் விடையால் அன்று, வல்கீயனின் தவ வலிமையாலும் அன்று. எப்போதும் தலையை அறுக்கும் சிறு படைபோல அவனுடன் ஒரு குழு சென்றதேயாகும். எனவே, அச்சுறுத்தி வென்றான் தலைபோகும் தண்டனைக்கு அஞ்சி, கார்க்கி வாய்மூடித் திரும்பினாள்.

இதனால் சொற்போரில் தோற்றவர் கடும் தண்ட னைக்கு ஆளாசு நேர்ந்ததும் புரிகிறது. (வாதிடுவதில் இத் தலை அறுப்பு நிகழ்ச்சியை நினைவிற் கொள்ளவேண்டும். பின்னரும் பொருந்தும் இடம் வரும்)

இங்கே வட நான்மறை பற்றி மனுநூல் குறித்த ஒன்றைக் குறித்துக்காட்டவேண்டும்.

‘தருக்க வாதங்களால் அறுதி செய்ய முடியாததுவேதம் அது தானே தோன்றியது"