பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 33

  • மேற்கண்ட மூன்றாவது கல் சங்கப் பாங்கைத் தகர்த்த அடாவடிக் கல். இதனால் சங்கப் பாங்கு ஒரு கரும்புள்ளி குத்தப்பெற்றதாயிற்று.

பட்டி மண்டபப் பத்துக் கட்டளைகள்

இவ்வாறு அமைந்த பட்டி மண்டயச் சங்கப் பாங்கிற்குரிய கருத்துக்களாகப் பலவற்றை இலக்கிய இலக்கண நூல்கள் சுட்டுகின்றன . அவை ஒரு தொகுப் பாகவோ, தனி நூலாகவோ இல்லாது போயினும் பரவ லாகவும், சிதறலாகவும் பல்வேறு நூல்களில் உள்ளன. அள்ளித் தெளிக்கப்பட்டன போன்ற அவற்றைப் பட்டி மண்டப இலக்கண நெறிகள் என்று கொள்ளலாம்.

சங்க இலக்கியம், அவற்றிற்கு முந்தியவை, ஒத்தவை, கீழ்க்கணக்கு நூல்கள், இவற்றை ஒட்டிப் பின் எழுந்த இரட்டைக் காப்பியங்கள் முதலியவற்றில் உள்ளவை பட்டி மண்டப வரலாற்றிற்கு உரம் ஊட்டுபவை அவற்றை, விளக்கப் பதிவுகள் என்றும் கொள்ளலாம்.

அந்த இலக்கண நெறிகளைப் பின்வரும் வகையில் நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு முறையே பட்டியலிடலாம்.

1. பட்டிமண்டபக் களம்

2. அவை அவையோர்

3. அவைநெறி