பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 |- பட்டி மண்டப வரலாறு

4. தலைவர் நடுவர்

5. கருத்தைவைப்போர்-அறைகூவல்

6. மறுப்போர்-மாறிமாறிக்கருத்துப்போர்

7. கருத்துப்போர்க்குத்தகுதி கொள்ளல்

8. அவையோர் கருத்து

9. முடிவு/தீர்ப்பு 10. பின் ara

இவை பத்தையும் பட்டிமண்டப நிகழ்ச்சியின் பத்துக் கட்டளைக் கற்கள் எனலாம்.

(1) பட்டிமண்டபக் களம்

பட்டிமண்டப நிகழ்ச்சி நிகழும் இடமே இங்கு களம் எனப்படுகின்றது. பட்டி மண்டபமாம் பட்டிமத்தைப்

பிங்கல நிகண்டு “கழகம் பட்டிமம் கல்விபயில் களம்” என்று களமாகக் குறித்துள்ளது.

மன்னன் காலையில் அரசவைக்கு வந்து அறிவுசான்ற பல்வகை நிகழ்ச்சிகளைக் காண்பான்; அவன் தலைமையில் சான்றோர் பங்குபெறுவர். இது நாள் ஒலக்கம்’ எனப்படும். இது நிகழும் மண்டபம் நாளோலக்க மண்டபம்’ என்று வழங்கப்பட்டது. இதனைப் பெருநாள் இருக்கை” என்றும் வழங்கினர். -