பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 T பட்டி மண்டப வரலாறு

இதில் “மாறுபட்டுக் கூறும்” என்றிருப்பதும் பட்டி மண்டபத்தைக் குறிக்கிறது.

ஆனால், இதில் பல சமயத்தோரும்” என்றிருப்பது நோட்டமிடற்கு உரியது. சங்ககால நூல்களில் சமயச்சொற் போர் பற்றிய குறிப்பு இல்லை . இருந்ததாக நச்சினார்க் கினியர் ஏதும் கண்டிருக்க வேண்டும் அல்லது பின்னர் சிலம்புக்கால அளவில் எழுந்த சமயப்பட்டிமண்டபத்தைக் கொண்டு எழுதியிருக்கவேண்டும்.

எவ்வாறாயினும் அரசன் வீற்றிருக்கும் அவை பட்டி மண்டப நிகழ்ச்சிக் களமாகவும் இருந்தது என்பது உண்மை. இதனை முன்னர் கண்ட மன்னிய அவையிடை வெல்லுறு போதினும்” என்றதும் வலியுறுத்தும்.

மற்றும் திருமாவளவனுக்குத் தோற்ற வச்சிரம், அவந்தி, மகதநாட்டு மூன்று மன்னர்களும் தம் திறைப் பொருளாக முறையே முத்துப்பந்தர், தோரணவாயில், பட்டிமண்டபம் ஆகிய மூன்றை வழங்கினர் இவை மூன்றும் அவனது அரசவைச் சித்திர மண்டபத்தில் இடம் பெற்றிருந்தன. -

இம்மூன்றும் அதனதன் படிமங்களாக பொம்மை களாக வழங்கப்பட்டவை என்று ஒருமுறை கவியோகி சுத்தானந்த பாரதியார் என்னிடம் கூறினார் . கவியோகி’. கூறக் காரணம் ஒரு பெரிய மண்டபத்தையும், தோரண வாயிலையும் ARCH அரசவையில் அமைத்துத்தர முடியாது