பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 T பட்டி மண்டப வரலாறு

அரசவை மண்டபத்திலன்றித் தனியாகப் பட்டி மண்டபக் களம் இருந்ததை முன்கண்ட குயக்கோடன் நிகழ்ச்சியாலும் அறியலாம் . அவன் புகுந்தான்’ என்று கண்டோம் அரசவைக் களமாயின் அவ்வாறு புகுந்துவிட முடியாது . மேலும் அவள் புகுந்ததும் தெற்கு வாயில் அடைக்கப்பட்டது . அரசவையில் இவ்வாறு வாயிலை அடைக்க முடியாது.

எனவே, புலவர் ஆராயும் இடமும் களமாகும். முதல், இடை, கடைச் சங்கங்களில் அச்சங்க இடங்களும் பட்டி மண்டபக் களமாக இருந்திருக்கும் (நான்காம் சங்கமாக மதுரையில் இக்காலத்தே தோன்றிய மதுரைத்தமிழ்ச் சங்கத்திலும் பட்டிமண்டப நிகழ்ச்சி நடந்தது.)

எனவே, அரசவை, புலவர் கூடும் அவை, சங்க அவை எனும் மூன்றும் அக்காலப் பட்டிமண்டபக் களங்களாகும். எக்களத்தில் அமைந்தாலும்பட்டிமண்டபத்திற்கு உரியோர் புலமைச் சான்றோர்களேயாவர்.

(2) அவை அவையோர்

‘அவை’ என்றால் கற்றோரும் சான்றோரும் மற்றோ ரும் கூடுவது ஒரு தலைவரைக் கொண்டது; உரைப் போரையும் கேட்போரையும் கொண்டது; அவையோர் . இன்றி அவை இல்லை; அவை என்றாலே அவையோரையே குறிக்கும்.