பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படுத்துவதாக கருதி மீண்டும் வங்கத்தை இணைக்க மறுத்ததோடு, அதில் உறுதியாகவும் இருந்தார். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கும் கர்சனுக்கும் நடந்த பரிமாற்றங்களில், கர்சன் தன் எதிர்ப்பை உறுதியாக காட்டும் நோக்கில் தன்னுடைய வைஸ்ராய் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனவே பிரிட்டிஷ் அரசு அவ ருக்கு பதிலாக மிண்டோ பிரபுவை (1905-1910) புதிய வைஸ்ராயாக இந்தி யாவுக்கு அனுப்பியது.

1905 நவம்பரில், மிண்டோ இந்திய துணைக்கண்டத்திற்கு வந்த போது நிலைமை கொந்தளிப்பாகவே இருந்தது. அந்தவேளையில் காங்கிரஸ் முஸ்லீம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துமிருந்தது. காங்கிரசில் உயர்சாதியினர் ஆதிக்கம் எங்கும் பரவியிருந்தது. முக்கியமான ஒரு காரணமாய் இருந்தது. அதுவுமின்றி காங்கிரஸ் இரண்டு குழுக்களாக பிரியும் கட்டத்திலும் இருந்தது. வழக்கம் போல தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதற்கு நடைமுறைவாதிகளாக தங்களைக் கருதிக் கொண்டே கோகலே உள்ளிட்ட குழுவினரும், இவர்களின் மீது தீராப் பகையோடு அதிகாரத்தை அடைய வேண்டிய ஆசையோடு மோதிய திலக் உள்ளிட்ட குழுவினராக இரு போக்குகள் உருவாகி இருந்தது. இந்த நடைமுறை வாதிகள் அல்லது மிதவாதிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அல்லது தீவிர வாதிகள் என்பதற்கு எப்படி பொருள் கொள்வது? இதை முழுக்க தேசிய உணர்வு சார்ந்ததாகவே நமது வரலாற்றாளர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மிதவாதிகளுக்கும் - அமிதவாதிகளுக்கும் உள்ள பொருள் விளக்கம் முற்றிலும் வேறானது. இதனைப் புரிந்து கொண்டால் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பண்டிதரின் நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும்.

பாலகங்காதர் திலக் எந்த அளவிற்கு தீவிரமானவர் ? காங்கிரஸ் தொடங்கிய காலத்திலிருந்து அது பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தும் போது, கூட்டத்தின் பின் இணைப்பாக சமூக கூட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் சமூகப் பிரச்சினைகள், நலிந்த மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 1892ல் நடந்த கூட்டத்தில் இந்த சமூகக் கூட்டங்கள் நடக்க கூடாது என்று பார்ப்பனிய அடிப்படைவாதி பாலகங்காதர் திலக் கடுமையான எதிர்ப்பை காட்டி னார், அவரது குழுவினரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத காங்கிரஸ் தனது கொள்கைக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த சமூக மாநாடு நடத்தும் வழக்கத்தையே கைவிட்டு விட்டது. எனவே திலக் போன்ற நபர்கள் கோரும் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்

கௌதம சன்னா / 24