பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என இருப்பின், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகக்கொள்ளப்படுகிறது. இதில் இந்துக்களும் முகமதியர்களும் 3 : 1 என்ற விகிதத்தில் இருப்பதால் 9 இந்துக்களும் 3 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடைய மாகாணத்தை 3 தேர்தல் பகுதிகளாக, அதில் இந்துக்கள் 3 பேர் முகமதியர் 1 நபர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேர்தல் தொகுதி (Electoral college) அமைக்கப்பட்டு உத்தேசமாக 100 உறுப்பினர்கள் எனக் கொள்வோம். இதன்படி 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இதில் வாக்களிக்கும் வாக்காளர்கள்

அ) நிலச்சுவான்தாரர்கள், குறிப்பிட்டத்தொகையை அரசுக்கு நிலவரியாக செலுத்த வேண்டும்

ஆ) கிராம அல்லது துணை நிலை அமைப்புகள் (Rural or Sub divisional board)

இ)மாவட்ட சமை உறுப்பினர்கள் (District Board members)

ஈ) முனிசிபல் கார்ப்ரேஷன் ஆகியோராவர்.

இதில் இவர்கள் மூலமாகவே 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவேளை 25க்கும் கீழான முகமதியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீதமுள்ளவர்கள் நியமனத்தின் மூலம் நிரப்பப்படுவார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 75, 25 இந்து மற்றும் முசல்மான்கள் 3 இந்து மற்றும் 1 முகமதியரை உறுப்பினர்களாக தெரிவு செய்வார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் 1 வாக்கு வீதமும், அதில் அவர்கள் ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் மூலமாக ஒவ்வொரு பிரிவினரும் மக்கள் தொகை அடிப்படையில் தேவையான பிரதிநிதித்துவம் அளிப்பது உறுதி செய்டப்படுகிறது". (2005;181)

மார்லியின் இந்த திட்டம் வெளிப்படுத்தும் சங்கதி ஐரோப்பிய பாணியிலான புரிதலைச் சார்ந்தது. ஏனெனில் மதரீதியான இனப் பிரச்சினையே ஐரோப்பியரின் பல நூற்றாண்டு பிரச்சினையாக இருந்தது எனவே மார்லியின் திட்டம் இந்து முஸ்லீம் பிரதிநிதித்துவம் என்பதாக வெளிப்பட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல எனினும் அவரது திட்டத்தில் உள்ள அரசியல் முக்கியத்துவம் என்னவெனில் தேர்தல் முறையானது

கௌதம சன்னா / 36