பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போராட்டத்தில் அரசுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப் போம் என எங்கள் முத்திரையை இட்டு கையொப்பம் இடுகிறோம்” (P. Sing - 27)

இந்த பத்வாவின் அறிக்கை பஞ்சாப் அரசு மூலம் வைஸ்ராய் மிண்டோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இந்து காங்கிரஸ் - முஸ்லீம் லீக் ஆகியோரின் கோரிக்கைகளை அரசும் மார்லியும் கவனமுடன் பரிசீலித்தனர்.

ஆனால் தாழ்த்தப்பட்டோர்களைப் பொறுத்தவரையில் இவ்வளவு வீச்சாக தம்முடைய எதிர்வினைகளை காட்டும் நிலையிலில்லை. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் லீக் கை வழி நடத்தியவர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர். அதனால் அவர்களது குரல் எளிதில் அம்பலமேறியது. ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரையில் இப்பயொரு வளமான பொருளாதாரப் பின்னணி இல்லை. எனவே எல்லாவற்றிற்கும் அவர்கள் தம்மையே சார்ந்திருக்க வேண்டும். எனினும் அவர்களும் கடுமையாகவே உழைத்திருந்தார்கள், அது மட்டுமின்றி அரசர் ஏழாவது எட்வர்ட் எழுதிய கடிதம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கையளித்தது. அரசரின் கடிதத்தின் மீதான நம்பிக்கையை பண்டிதர் வெளிப்படுத்தி யிருந்தார்.

சூழல் நெருக்கடியாக இருந்ததை தலித்துகள் உணர்ந்தனர். மார்லியின் முடிவு 17.12.1908 அன்று பிரபுக்கள் அவையில் வைத்த அறிக்கையிலேயே அநேகமாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்படியான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்.

எனவே இதில் தலித்துகள் தனித்து விடப்பட்டனர். பண்டிதர் முனைப்பு காட்டி மார்லியின் திட்டம் குறித்து தமது கருத்தை முன் வைத்தார். அக்கருத்து இந்திய சூழலுக்குப் புதிது மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்கால கருத்தாகவும் அது நிலைத்து விட்டது. மார்லியின் கருத்துப்படி இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் உண்டு, இதை சாதி இந்துக்கள் எதிர்கொண்ட விதமோ விபரீதமாயிருந்தது. அவர்கள் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல என்று மறுப்பு கூறி, இந்தியர்களுக்கும் இசுலாமியருக்கும் மனஸ்தாபம் உண்டாகுமென எழுதினார்கள்: இந்த கருத்தை மறுத்தும், தன் திட்டத்தை முன்வைத்தும் 1909ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் தமிழன் இதழில் பண்டிதர் எழுதினார்.

"அதாவது இந்தியர்களென்றும், மகமதியர்கள் என்றும் பிரிவினையாக கூறுவதால் பேதமுண்டாயதேயன்றி அவர்களையும்

39 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை