பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியர்கள் என்றே கூறுவோமாயின் பேதந் தோன்றவாம்.

ஏனெனில் இத்தேசத்தில் வந்து குடியேறிய வேஷ பிராமணர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது இத்தேசத்தை சிற்சில இடங்களில் அரசாண்ட மகமதியர்களை ஏன் இந்தியரென சொல்லக்கூடாது. எனவே அவர்களும் ஒர் வகையாய் இந்தியர்களே, மகமதியர்களை இந்தியர்கள் என்று கூற கூடாது என்றால் வைணவர், சைவர், வேதாந்திகள் என்னும் மூவருக்கும் இந்தியரென்னும் பெயர் பொருந்தாது. பெளத்த மார்க்கத்தார் ஒருவருக்கே இந்திய ரென்னும் பெயர் பொருந்தும்.

ஐந்திரியங்களை வென்ற புத்த பிரான் இந்திரன் என அழைக்கப்பட்டதையொட்டி, அவரை பின்பற்றியவர்கள் இந்தியர் என்றும், அவர்கள் வாழும் தேசம் இந்திய தேசமென்றும் அழைக்கப்பட்டது. இந்த இந்தியர் எனும் பெயரை சகல மதத்தவரும் ஏற்றுக்கொள்ளும்போது மகமதியர் ஏன் இந்தியர் என சொல்லக் கூடாது

- என்று தன்னுடைய எடுப்பான வல்லிய மறுப்பினை கூறிய பண்டிதர் தன்னுடைய விகிதாச்சார திட்டத்தை தொடர்ந்து முன் வைத்தார். அது எப்படிப்பட்ட திட்டம்...

கௌதம சன்னா / 40