பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாதி பேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் 25 பேர் 25%
சாதிபேதமுள்ள இந்தியர்கள் 25 பேர் 25%
மகமதியர்கள் 25 பேர் 25%
யூரேஷியர் 13 பேர் 13%
இந்திய கிறித்தவர் (Native christian) 12 பேர் 12%
மொத்தம் 100 100%

இந்த ஆலோசனைகள் நிறைவேற்றுவதானால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டதுடன்

இராஜாங்க உத்தியோக சாலைகளிலும் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று அரசு அலுவல்களில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார், மேலும், முக்கியமாக:

இராஜங்க எக்ஸிகூட்டிவ் மெம்பர் (Executive council member) ஒருவரை தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டுமாயின்

ஆண்டுக்கு ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும்.

அந்த நியமனமும்

திபேதமற்ற திராவிடர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
சாதி பேதமுள்ள இந்தியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
மகமதியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
யுரேஷியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்
இந்திய கிறித்தவர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

என முறையாக நியமித்து காரியங்களை நடத்த வேண்டும். இந்த நியமனம் சுழற்சி முறையானது என்பது சொல்லாமலே விளங்கும்.

பண்டிதர் தன் திட்டத்தை வெளியிட்டவுடன் கடும் எதிர்ப்பு சாதி இந்துக்களிடமும், பிறரிடமும் உருவானது.

கௌதம சன்னா / 42