பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இ. புலவர் கா. கோவிந்தன் அறுசுவைகளையும் கூட்டும் வகையால் ஊட்டி உண்ணவும் வேண்டும் நிலைக்கு அவன் உயர்ந்து விட்டான்; உணவுக் குறைபாடு தீர்ந்ததும், மனித மனம் உறையுளை நாடிற்று காட்டு வாழ்வினராய் வாழ்ந்திருந்த காலை, மலைக் குகைகளும், மரச் செறிவுகளும் போதும், மழையும் வெயிலும் போலும் இயற்கை தரும் துன்பங்களிலிருந்தும், காட்டு வாழ் கொடுவிலங்குகளின் கேடுகளிலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்ள என்று எண்ணி, அவற்றிலே நிறைவுகண்ட மக்கள், இன்று வேனிற் காலத்தில் வெப்பம் நீங்கிக் குளிர் ஊட்டவும், பனிக்காலத்தில் குளிர்போக்கி வெப்பம் ஊட்டவும் வல்ல வேறு வேறு அறைகளும் நிலைகளும், உண்ண ஓர் அறை, உறங்க ஓர் அறை, உரையாட ஓர் உறை, விருந்தினரை வரவேற்க ஓர் அறை, விழாக் காண ஒர் அறை என எண்ணிலா அறைகளும் நிலைகளும் கொண்ட எழுநிலை மாட வாழ்வினையே விரும்புவராயினர். உலாவிலும், உறையுளிலும் ஒரு குறையும் இல்லை என்ற நிலை பிறந்த பின்னர், மனிதன் உடையில் நாட்டம் செலுத்தினான்; நாகரிகம் அறியாது நாடோடிகளாய்க் காட்டில் அலைந் திருந்த போது, உடலை மறைத்து மானத்தைக் காக்க யாதேனும் ஒன்று தேவை என்ற உணர்வே முன்னின்றமை யால், அது செய்யும், காட்டு மரஞ் செடி கொடிகளின் இலைகள், அவற்றின் பட்டைகள், காட்டு விலங்குகளின் தோல்கள் ஆகிய இவற்றுள் எதையேனும் ஒன்று கொண்டு உள்ள நிறைவு கண்ட மக்கள், இன்று, அம்மரஞ் செடி கொடிகளின் இலைகள்ையும் மரவுரிகளையும், மாவின் தோல்களையும் தொடுவதிலர்; மாறாகப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டும் பன்னிறம் ஊட்டப் பெற்ற