பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இ. புலவர் கா. கோவிந்தன் பொருள் கொள்ளும் நச்சினார்க்கினியர் உரை, பொருந்தும் உரையாகாது என அறிக. பிண்டம் மேயப் பெருஞ் சோற்று நிலை: மண்ணாசை கொண்டு தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வந்து, தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தியும், ஆங்குள்ள தங்கள் நாட்டு அருநிதிகளைக் கொள்ளை கொண்டும், அப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டு தருக்கிய மாற்றரசன் படை மீது பாய்ந்து, போராடி வென்று துரத்தித் தங்கள் நாட்டிற்கு வந்துற்ற கேட்டினைப் போக்கிய அம்மண்ணுக்குரிய மன்னன், அம்மகிழ்ச்சி மிகுதியால், அவ் வெற்றியை எளிதில் தேடித் தந்தவர், தன் நாற்படையாளருக்குக், கறிவிரவு நெய்ச் சோறும், கள்ளும் கொண்டு பெருவிருந்தாற்றி மகிழ்வன். அண்டை நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வந்த காவலன், அக்களிப்பு மிகுதியால் அது கவரப் பணிபுரிந்த படை வீரரும் தானுமாக உண்டும் தின்றும் உவந்து கூத்தாடியும் மகிழ்ந்த நிகழ்ச்சியினைக் கூறும் "உண்டாட்டு" என்ற துறைவெட்சிக் கண் இடம் பெற்றிருப்பதை ஈண்டு நினைவுட் கொள்க. இத்துறைக்குத், "திரட்சி பொருந்தின. பெருஞ்சோற்று நிலை” என உரையாசிரியரும், "வேந்தன், போர்தலைக் கொண்ட பிற்றை ஞான்று போர் குறித்த படையாளரும் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை" என நச்சினார்க்கினியரும் கூறும் பொருள்நிலையை நோக்க, வீரர்க்கு விருந்தளித்தல் என்ற பொருள் வகையில் ஒருமைப்பாடு உடையராகக் காணப்படினும், நச்சினார்க்கினியர், இச்சூத்திரம், மண்ணாசை கொண்டு வந்தவன், அதுகாக்க முனைந்த