பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 141 ஈண்டு.அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு.அவர் மாண்இழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம்மூர் ஆங்கண் தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே! என்ற இடைக்குன்றுார்க் கிழார் பாராட்டும் (புறம்:78) "கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, நார்அரி நறவின் எருமையூரன், தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக் கொன்று களம்வேட்ட ஞான்றை - வென்றி கொள்வீரர் ஆர்ப்பினும் பெரிதே! என்ற நக்கீரர் பாராட்டும் (அகம்: 36) வென்றோர். விளக்கத்தின் பாற்பட்டனவே. பகைவரை வென்று அறவே அழித்து மீளும் இந் நிகழ்ச்சியோடு, மண்காக்க விரையும் மன்னன் படைப் பெருமை கண்டு அஞ்சி, மண்ணாசை கொண்டு வந்தவர், தம் நினைவை மாற்றிக் கொண்டு, அவனைப் பணிந்து, தம் பிழை பொறுப்பான் வேண்டி அரிய பெரிய பொருள் களைத் திறையாக அளிக்க, அது பெற்று, அவரை அழிக்காதே விடுத்து மீளலும், அப்போது வந்த வேந்தர் களை வென்று ஒட்டிய வேந்தன், மேலும் சிலர் வருதலும் கூடும் என்ற கருத்தால், எல்லைக்கண் உள்ள பாசறை வாழ்க்கையினை மேலும் சிலநாள் மேற்கோடலும்