பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புலவர் கா. கோவிந்தன் வென்றோர் விளக்கத்தின் பாற்பட்டனவே. இவ்விரு நிகழ்ச்சிகளையும், "அருந் திறை அளப்ப ஆறிய சினத்தொடு பெரும்பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே", "மதிக் குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லாம் மறம் துறப்பவும், பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை இருந் தன்று” என விளக்கமும், "பேராண் வஞ்சி”, “பாசறை நிலை" எனப் பெயரும் அளித்து முறையே மேற்கொண்டுள்ளார் பு:வெ. மாலையார். с தோற்றோர் தேய்வு: வென்று ஒட்டிய மண்ணுக்கு உரியான் வெற்றியைத் தனித்தும் தோற்று ஓடிய மண்ணாசை கொண்டு வந்தவனின் கேட்டினை இணைத்தும் பாராட்டிய வழியே, அவ்வெற்றியின் முழு உருவம் வெளிப்படும் ஆகவே, வென்றோன் விளக்கத்தைக் கூறுவதை அடுத்துத் தோற்றோன் தேய் வினையும் கூறியுள்ளார் ஆசிரியர். குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை. "குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடையது கொற்றவள்ளை. கொற்ற வள்ளையாவது, தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை" என்பது இளம்பூரணர் தரும் விளக்கம், "வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினால் பகைவர் நாடு அழிதற்கு இரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப் பாட்டு. வள்ளை: உரற்பாட்டு: தோற்ற கொற்றவன் கொடுக்கும் திறை என்று சொல்வாரும் உளர்,” என்பது நச்சினார்க் கினியர் தரும் விளக்கம். மண்ணாசை கொண்டு வந்தவனின் மறத்தைக் கெடுத்துத் தன் மண்ணைக் காத்துக் கொண்ட மன்னவன் வெற்றிச் சிறப்போடு, தோற்ற அம்மண்ணாசை உடையானின் இழிவையும் ஒருசேரப் பாடவே, அம்மண்ணுக்கு உரியான் புகழ் பாராட்டப்