பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இ. புலவர் கா. கோவிந்தன் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் ஐவன வெண்ணெல் அறைஉரலுள் பெய்து இருவாம் ஐயனை ஏத்துவாம் போல், அணிபெற்ற மைபடுசென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவாம் நாம்!" என்ற சிலப்பதிகாரக் கலித்தொகைப் பாக்களால் வள்ளைப் பாட்டின் இயல்பினை ஒருவாறு உணர்க. கொற்ற வள்ளைத் துறையின் பொருள் இதுவே என்பது "கொற்றவள்ளையாவது, மன்னவன் புகழ் கிளத்து ஒன்னார் நாடு அழிய இரங்கின்று” எனக் கூறும் பு:வெ. மாலை விளக்கத்தாலும் உறுதியாதல் காண்க. அழிபடைதட்டோர் தழிஞ்சி: "மாற்றார் விடு படைக் கலன் முதலியனவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித் தழுவிக்கோடல்" என்று இளம் பூரணரும், "அங்ங்னம் வென்றும் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டு அழிந்தவர்களைத் தாம் சென்றும், பொருள் கொடுத்தும், வினாவியும் தழுவிக் கோடல்" என்று நச்சினார்க்கினியரும், இத்தொடர்க்குப் பொருள் கூறி யுள்ளனர். போர்க்களம் புகுந்து போராடி வெற்றிபெற்ற வீரர்க்கு விருந்தளித்துச் சிறப்புச் செய்த வேந்தன், வெற்றி, வீடு திரும்பிய அவ்வீரர்களால் மட்டும் வந்துற்றது அன்று: அக்காலத்தில் பகைவரின் படைக்கலம் பாய்ந்து ஆண்டே மாய்ந்து போனவரும், அப்படைக் கலங்களால் கண்ணும், கையும், காலும் போலும் உறுப்புகளை இழந்து எழுந்து நடமாட மாட்டாது, மலைகளிலும் மருத்துவ நிலையங் களிலும் வீழ்ந்து கிடப்பவரும் ஆகிய அவ் வீரர்க்கும்