பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 15 நிலமாகவே, வாழ்வதற்கு வழிகாணாது வருந்தினார்கள்; அவ்வருத்தம் மிகவே, பழி பாவங்களை எண்ணிப் பாராது, அப் பாலையைக் கடந்து போவாரைக் கொன்று அவர் உடைமைகளைக் கொள்ளை கொண்டு உயிர்வாழத் தலைப்பட்டனர்; அவ்வகையால் ஆறலைக்கும் கொடியோ ராய் அலைந்து திரிந்த அவர்கள் தங்கள் வாழிடத்தை அடுத்து உளதான முல்லை நிலத்தார்பால் ஆடும், மாடும் குவிந்திருக்கக் கண்டு, அம்முல்லை நிலத்துள் அந்நிலத்தா ராகிய <gļufř அறியாவாறு புகுந்து, அவர் உடைமைகளைக் கொள்ளையிட்டு வரத்தலைப் பட்டனர்; முல்லை நிலத்து ஆடு மாடுகள், குறிஞ்சி நிலத்து மான்போலவும், மரையா போலவும், தாமே பெருகின ஆகாது, தம்மால் வளர்க்கப் பட்டன வாதலின், தமக்கே உரியவாம் என்ற உணர்வு அவ்வாயர்க்கு உண்டாகவே, அவ்வுடைமைகளைக் கவர்ந்து செல்லும் பாலை நிலத்து மறவர் மீது மாறாச்சினம் உடையவராகி அவரை எதிர்த்துப் போராடி அழிக்கத் தலைப்பட்டனர்; இவ்வகையால் தமிழ் மக்களிடையே மெல்ல இடம் பெற்றது போராட்டம். இவ்வாறு தம் உடைமைகளாம் ஆனிரைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற பாலை நிலத்து மறவரைக் கொன்று, தம் உடைமைகளை மீட்டுக் கொணர ஆயர் மேற்கொண்ட போரை, ஆசிரியர் தொல்காப்பியனார் வெட்சிப் போர் எனும் பெயர் அளித்து விளக்கியுள்ளார். பசித்த பாலை நிலத்து மறவர் கவர்ந்து செல்ல, பேணி வளர்த்த முல்லை நிலத்து ஆயர் மீட்டுவர, ஆனிரை காரணமாக இடம் பெற்ற இப்போர் முறை. காலம் செல்லச் செல்ல வேறு உருவம் கொண்டு விட்டது. தம் ஆனிரைச் செல்வத்திற்கு அவ்வப் போது ஊறு நேரக் கண்ட ஆயர்