பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 169 ஒவ்வொன்றும், ஒரிடத்தே இரண்டாகப் பிரிந்து சிறிது துாரம் ஒடி மீண்டும் ஒன்று கலந்து ஒட உண்டாகும், திருவரங்கம் போலும் ஆற்றிடைக் குறைகள், எல்லா ஆறுகளிலும் உண்டாதல் இயலாது போவதால், ஆறுகள் நகர்களுக்கு ஒருசார் அரணாகவே அமைதல் கூடும் என்பதையறிந்து, பிற அரண்களையும் பொருந்தும் வகையால் அமைத்து வைத்தனர். அவ்வாறு அமைக்க முனைந்த அவர்கள், அந்நால்வகை அரண்களுள், மலையரண் இயற்கையாக அமைதல் இயலுமேயல்லது, அதை விடுத்து ஏனைய அரண்களைத் தாமாகவே படைத்துக் கொண்டனர். நகரத்தின் நாற்புறங்களிலும் காடுகளை வளர்த்தனர். காட்டரணை அடுத்து, ஆழ்ந்து அகன்ற அகழிகளைத் தோண்டினர். நகரைக் கைப்பற்றும் கருத்தோடு வந்து வளைத்துக் கொள்ளும் பகைப் படை, காவற் காட்டை அழிப்பதிலும் அகழியைத் துர்ப்பதிலும் முனையுமாதலின் அவ்வழிவு நிலை இடம் பெறாவாறு, அப்பகைப் படையைத் தலை நகர்ப் புறத்திலேயே போராடி அழிக்க வேண்டும் என்பதே போர் முறையின் தலையாய நெறியாகும் என்பதையுணர்ந்து, புறக்காவல் வீரர்கள் இருந்து பணிபுரியத் தக்க பெருநிலப் பரப்பினை, அகழிக்கும் மதிலுக்கும் இடையே அமைத்தார்கள். புறநகர் என்னும் பெயருடையதாகிய அப்பெரு நிலப் பரப்பினை அடுத்து, வானளாவ உயர்ந்து, மலையெனக் காட்சி அளிக்கும் மதில்களை எழுப்பினார்கள். அம் மதில் அகத்தே, அரசன் பெருங்கோயில் முதலாம் மாட மாளிகைகள் நிறைந்த அந்நகரை அமைத்தார்கள். கெளந்தி அடிகளோடு மதுரைக்குச் சென்ற கோவலனும் கண்ணகியும் வையையாற்றைப் புணையால் கடந்து,