பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புலவர் கா. கோவிந்தன் தென்கரை அடைந்து, காவற் காட்டையும் அகழியினையும் கடந்து புறநகர் புகுந்து தங்கினார்கள் எனச் சிலப்பதிகாரம் அளிக்கும் செய்தியால், ஆறு, ஆற்றைக் கடந்தால் காவற் காடு, காவற்காட்டைக் கடந்தால் அகழி, அகழியைக் கடந்தால் புறநகர், புறநகரைக் கடந்தால் மதில், மதிலைக் கடந்தால் அகநகர் என்பதே பழந்தமிழ்ப் பேரூர்களின் அமைப்பு முறையாகும் என்பது உறுதியாதல் அறிக. “மாதவத் தாட்டி யொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி வானவர் உறையும் மதுரை வலம் கொளத் தான்நனி பெரிதும் தகவுடைத்து என்றாங்கு அருமிளை உடுத்த அகழி சூழ் போகி. போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கை காட்டப். புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து." - சிலம்பு ; 13:179-196 மரம் செடிகொடிகள் மண்டியும், ஒன்றோடொன்று பின்னிக் கொண்டும் கிடப்பதால், மக்களும் மாவும் எளிதில் கடந்து செல்லாவாறு இடையூறு பயக்கும் பெரு மரக் காடுகளை ஊடறுத்துக் கொண்டு போதல் படையாளர்க்கு அறவே இயலாது என்பதை அறிந்த அக்கால அரசர்கள், தங்கள் நாட்டையும் தலைநகரையும் சூழ, இயற்கைப் பெருங்காடுகள் இடம் பெறுவதைப் பெரிதும் விரும்பினார்கள். நாடு வளரக் காடு அழிந்து போன பிற்காலத்தில், காட்டரண்களை இயல்பாகப் பெறுதல் இயலாதாகவே, தம் அரண்களைச் சூழச் செயற்கைக் காடுகளை வளர்த்தார்கள். நொச்சி மரங்களையே பெருமளவில் கொண்டனவாய், உறந்தை என வழங்கப் பெறும் உறையூரைச் சூழ அமைந்திருந்த