பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இ. புலவர் கா. கோவிந்தன் அலமரல் யானை உருமென முழங்கவும், பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்இல் இணைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம! ஈங்கு இனிது இருத்தல்... திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுத்தக வுடைத்து இது காணுங்காலே. பு, இவ்வாறு நனிமிகப் பெரிய நாற்படையால், நெடிது நாள் வளைக்கப்பட்ட போதும், அழிவுற்றுப் போகாது நின்று நிலைபெற வல்ல உரத்தினை ஒர் அரணுக்கும், ஒரு நாட்டிற்கும் உதவுவது, அவ்வரணகத்தும், அந்நாட்ட கத்தும் இருக்கும் விளைநிலங்கள் வழங்கும் உணவுச் செல்வங்களே ஆகும். முற்றுகை எத்துணைக் காலம் நீடிப்பினும், அகத்துள்ளார்க்கு உணவுக் குறைபாடு நேரா வாறு காக்க வல்ல உணவு வளம் படைத்த நாட்டையோ அரணையோ பகையரசர் கைப்பற்றிக் கொள்வது இயலாது. முடியுடை மூவேந்தர் என்ற பெருமைக்குரிய பேரரசர்களாம் தமக்கு இல்லாப் பெரும்புகழ், பறம்பு மலை நாடாளும் குறுநிலத் தலைவனாம் வள்ளல் பாரிக்கு வருவதா என்ற காழ்ப்புணர்வால் அவனைக் கொன்று அழிக்கத் துணிந்த சேரனும், சோழனும், பாண்டியனும் பறம்பரண் ஒரு சிற்றரண்; அதனகத்து வாழ்வார் புறத்தே யிருந்து உணவு வந்தால் அல்லது உயிர் வாழார்; ஆகவே அவ்வுணவு அரணகத்துட் புகாவாறு அவ்வரணை வளைத்துக் கொண்டால், வள்ளல் பாரிபணிந்து விடுவன் என்று எண்ணித், தம் நாற்படை கொண்டு அப்பறம்பு