பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 & புலவர் கா. கோவிந்தன் விளக்கங்களை முன்னர்க் கூறி அவ்விரண்டின் பின் நிகழ்ச்சிகளாகிய கரந்தை காஞ்சி நிகழ்ச்சிகள் பற்றிய விளக்கங்களைப் பின்னர்க் கூறியது போல், அரண் போர் பற்றிய விளக்கம் ஈண்டும், அரண் வளைக்கும் முன் நிகழ்ச்சியாகிய உழிஞை பற்றிய விளக்கங்களை முன்னர்க் கூறி, அதை மீட்கும் நிகழ்ச்சியாகிய நொச்சி பற்றிய விளக்கங்களைப் பின்னர்க் கூற வேண்டுவதே முறை யாகவும், வைப்பு முறையினை மாற்றியிருப்பது ஏனோ அறியேம். புறப்பொருட்டிணைகள் பற்றிய விளக்கங்களையும் விரிவுகளையும் விளக்கும் நிலையில், புறப்பொருள் வெண்பாமாலை, அரண் குறித்த போர்பற்றிய விளக் கத்தைக் கூறுங்கால், மதிலைக் கைப்பற்றும் முயற்சிகளைக் கூறும் உழிஞைத் திணை பற்றிய விளக்கங்களை முதற்கண் கூறி, அதைக் காக்கும் முயற்சிகளைக் கூறும் நொச்சித் திணை பற்றிய விளக்கங்களைப் பின்னர்க் கூறுகிறதேனும், இயல்பான வைப்பு முறை அது ஆகாது. அரண்கோடலைக் கூறும் உழிஞையினை முதற்கண் விளக்கி, அது மீட்டலைக் கூறும் நொச்சியினைப் பின்னர் விளக்குவதே முறையாகும். ஆனிரை கவர்தலும், அது மீட்டலும் அடுத்தடுத்து நிகழ்வதாகலின் அவை கூறும் திணைகள் அடுத்தடுத்து விளக்கப்படுவது போலவும், மண்ணைக் கோடலும் அது மீட்டலும் அடுத்தடுத்து நிகழ்வதாகலின் அவை கூறும் காஞ்சியும் வஞ்சியும் அடுத்தடுத்து விளக்கப்படுவது போலவும், அரண் கோடலும், அது மீட்டலும் ஆகிய நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நிகழ்வதாகலின், அவை கூறும் உழிஞை, நொச்சித் திணைகளும் அம்முறையை ஒட்டி, முன்பின்னாக வைக்கப் பெறுவதே முறையாகும். புறப் பொருள் வெண்பாமாலை ஆசிரியருக்கும் இதுவே உடன்