பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 201 வாய்ப்பு அரணகத்துப் படைக்கு உண்டு. புறத்தோர் ஏணியிட்டும் ஏறலாகா உயர்வும், குத்தி அழிக்கலாகாத் திண்மையும், வளைவில் போலும் அரும் பொறிகள் பல அமையப் பெற்று அணுகலாகா அருமையும் உடையதாத லோடு, தாம்விடும் படைக்கலங்கள் புறத்தார் மீது சென்று பாயவும், அவர்விடும் படைக்கலன் ஒன்று தானும் தம் மீது வந்து பாயாது போகவும் வாய்ப்பளிக்கும் வகையில், புறத்தோர்க்குப் புலனாகாதவாறு, அகத்தோர் நின்று போரிடற்கேற்ற தலை அகலமும் உடையதே அரண் ஆகும். மேலும், அகத்தோர் மதில் உச்சிக் கண் நின்று போரிட, புறத்தோர் மதில் அடியில் நின்று போரிட வேண்டி யிருக்கும் நிலையில், புறத்தோர் தொடுக்கும் படைக் கலன்கள் அகத்தோர் மீது சென்று படாதாக, அகத்தோர் கையிலிருந்து புறப்படும் ஒவ்வொரு படைக்கலனும், புறத்தார் மீது தப்பாது சென்று பாயும் ஆதலின், இப்போரில் பேரழிவுக்கு உள்ளாகிவிடின், அரண் கோடல் குறிக்கோள் பயனற்றுப் போய் விடுமாதலின், அரணைத் தாக்க ஆணை பிறப்பிப்பதன் முன், அழிவைத் தவிர்க்க வல்ல தற்காப்பு வகைகளை அளித்தே அனுப்புவன். ஒரு வீரனுக்குப் போரில் தன்னைக் காக்கும் கவசமாக அமைவது, அவன் கையிலிருக்கும் கேடயமே ஆகும். ஆகவே, அரண் தாக்கச் செல்லும் படைவரிசையில் அணிவகுத்துச் செல்லும் படைவீரன் ஒவ்வொருவன் கையிலும் கேடயம் காட்சி அளிக்கும். அதைக் கூறுவதே தோலின் பெருக்கம் என்ற இத்துறை, பண்டு கேடயமாகப் பயன்பட்டது பெரும்பாலும் தோலே ஆதலின் ஈண்டு தோல் என்பது தோலால் ஆன கேடயத்தை உணர்த்தி, மீண்டும் தோல் ஏந்திச் செல்லும் வீரரைக் குறிக்கும்.