பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இ. புலவர் கா. கோவிந்தன் “மயில்கணத்து அன்னார் மகிழ்தேறல் ஊட்டக் கயில்கழலார் கண்கனல் பூப்ப - எயில்கண்ணார் வியப்போர் செய்தாலும், வென்றி அரிதரோ மாயப்போர் மன்னன் மதில்." அரண் கொள்ளும் அரசன் புகழ்பாடுவதே உழிஞை யாம் எனில், அதில் அவனால் பற்றமாட்டா அரணின் புகழ்பாடல் இடம் பெறுவது பொருந்தாது. ஆகவே தன் அரணை வளைத்துக் கொண்டிருக்கும் பகைப்படையை அழித்துத் தன் அரணைக் காத்துக்கோடலே உழிஞையாம் எனத் தொல்காப்பியர் கொண்டது போல் ஒரு துறையாகக் கொள்ளாமல், அரணை முற்றிக் கொள்வது உழிஞை, அதை மீட்டுக்கோடல் நொச்சி என இரு வேறு துறைகளாகக் கொள்ளும் நிலையில், அரண் பெருமைபாடும். "ஆரெயில்" என்ற அத்துறை நொச்சியில் இடம் பெறற்கு உரியதேயன்றி, உழிஞையில் இடம் பெறுதற்கு உரியதன்று. அவ்வாறாகவும், பு.வெ. மாலையார் அதை உழிஞைக்கண் வைத்தே விளக்கியுள்ளார். துறைகள் வைப்பு முறையில், பு.வெ. மாலையார் செய்த மற்றொரு பிழை இது. நிற்க. புறத்தோன் போர் முறை மேற்கொள்ள, அவன் படை புத்துணர்ச்சி கொண்டு போரிடத் தொடங்கியதால், அரணைக் காத்து நிற்கும் படை அத்தாக்குதலைத் தாங்க மாட்டாது புறங்காட்டுவது இயல்பே. படை புறங் காட்டிற்று என்பதாலேயே அரணுக்குரியான் அடிபணிந்து போய்விடுவதில்லை. ‘புறத்தோன், புகுந்து போரிடாது வாளா கிடந்தமையால், அரண் காவல் பொறுப்பினைப் படைவீரர்பால் விடுத்து யான் வாளா இருந்துவிட்டதன் விளைவு இது. அப்பொறுப்பற்ற நிலையினை மேற் கொள்ளாது யானும் விழிப்புணர்ச்சியோடு இருப்பின் இது நேர்ந்திராது!’ என்ற உணர்வு வரப்பெற்றதும், அரணுக்