பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்சியும் கரந்தையும் வெட்சியாவது நிரை கவர்தல், பகைவர் நாட்டுப் பசு நிரைகளைக் கவர்ந்து வரச்செல்லும் வேந்தரும் வீரரும் வெட்சி மலர் அணிந்து செல்வராதலின், நிரைகவரும் இவ்வொழுக்கம் வெட்சியெனும் பெயர் பெற்றது. வெட்சி வீரர் வெட்சிமலர் அணிதல், தாம் பிறந்த குடி இஃது என அறிவித்தற் பொருட்டு, சேரர் பனந்தோடும், சோழர் ஆத்திப் பூவும், பாண்டியர் வேப்பம் பூவும் அணிதலைப் போன்றதுதானோ அல்லது அம்மலர் அணிவதில் யாதேனும் தனிச் சிறப்பு உண்டோ என அறிதல் நலமாம். வெட்சி மலர் செந்நிறம் உடையது என்ப. நக்கீரரும் சீத்தலைச் சாத்தனாரும் "செங்கால் வெட்சி” (முருகு: 21; மணி. 3 ப என, அம்மலர்க்குச் செந்நிறம் ஏற்றிக் கூறுதல் காண்க நிரை கொள்ளச் செல்வார், வெட்சி மலர் அணிந்து சேறல், செவ்வானம் செல்வதுபோலும்,- "வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியால் செவ்வானம் செல்வது போல் செல்கின்றார்" - (பெரும் பொருள் விளக்கம்: புறத்