பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 247 தார் நிலை: தானை, யானை, குதிரை, தேர் என்ற நால்வகைப் படைகளும் எண்ணாலும் பெரியவை; எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்மையும் வாய்ந்தவை என்றாலும், அவற்றை இடமும், காலமும், களமும் அறிந்து ஏவல் கொள்ளவல்ல படைத் தலைவன் ஒருவன் இல்வழி, அப்படை, பயனுறுவதற்கு மாறாகப், பாழ்பட்டே போகு மாதலின், நாற்படையினும் நனிமிக இன்றியமையாதவன் நல்ல படைத் தலைவனாவன். "நிலைமக்கள் சால உடைத்து எனினும், தானை தலைமக்கள் இல்வழி, இல்” என்றார் திருவள்ளுவர். அதனால் நாற்படைகளைக் கூறும் துறைகளை அடுத்துப் படைத் தலைவன் பெருமை பாராட்டும் தார்நிலை என்ற இத்துறை கூறப்பட்டுள்ளது. புகழாசை மிக்குப் போருக்கு எழும் வேந்தன், புகழாசைக்கு அடிமைப்பட்டுவிட்ட மனம் உடையனாகி விடுவதால், களத்தின் நிலையறிந்து போராடுவது இயலாது; புகழாசையால் கொண்டு விட்ட கட்டுக் கடங்கா வெறியுணர்வோடு பகைவர் அனைவரையும் ஒருசேர அணுகித் தாக்குவன்; அல்லது, தன் நாற்புறமும் பகைவர் படை வந்து சூழ்ந்து கொண்டு, தன்னைச் செயலற்ற வனாக்கும் நிலை எழுவதையும் நினையாதே நின்று போராடுவன். அதனால், அவன் கருதி வந்தது கை கூடாது போவதோடு நில்லாமல், அவன் அழிந்து போவதும் நிகழும். அதனால், அந்நிலை உண்டாகி விடாவாறு, அரசன், அவ்வாறு ஆராயும் திறமற்றுப் போகும் நிலையிலும், களத்தின் நிலையறிந்து போராடும் நல்லறிவும், வேந்தன் வேட்கையைக் குறைவற நிறைவேற்றித் தருவதே தன் கடனாம் என எண்ணும் நல் உள்ளமும், அதைச்