பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 இ. புலவர் கா. கோவிந்தன் சிறை செய்வதன் முன்னர்ச் சோழர் படை முதலிகளாம் நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலியோரும், சேரர் படை வீரரால் அப்பழையனும் இறந்து வீழ்ந்த நிகழ்ச்சி இத்துறைக்குச் சாலும் சான்றாகும். "நன்னன் ஏற்றை, நறும் பூண் அத்தி, துன்னரும் கடுந் திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை, என்றாங்கு அன்றவர் குழிஇய அளப்பருங் கட்டுர்ப் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டு அது நோனான் ஆகித் திண்தேர்க் கணையன் அகப் படக் கழுமலம் தந்த பிணையலம் கண்ணிப் பெரும்பூண் சென்னி." -அகம்: 44. போர்க்களத்தின் முன் வரிசையில் நின்று போராடும் வேந்தரைக் காக்க விரையும் படைத் தலைவர் பெருமையைப் பாராட்டியதை அடுத்து, அவர் அப்போரில் பட்டுப் பெருமை பெற்ற நிலையைப் பாராட்ட வேண்டுவது முறையாம். ஆதலாலும், புகழாசை கொண்டு. களம்புகுந்த வேந்தர்களின் முடிவைக் கூறுவதன் முன்னர், அவர் தம் படைத் தலைவர்கள் முடிவுறும் நிலையினைக் கூற வேண்டுவது முறையாம். ஆதலாலும், இத்துறை படைத் தலைவர் பெருமை பாராட்டும் துறையாம் தார் நிலைக்குப் பின்னும், இரு வேந்தரும் ஒரு களத்து அவியும் மாண்பினைக் கூறும் துறையாம் தொகை நிலைக்கு முன்னும் கூறப்பட்டுள்ளது. படைத்தலைவர் களம்புகும் நிகழ்ச்சியைக் கூறும் துறையினை அடுத்து, அவ்வீரர் அழிவுற்ற நிலைகூறும் துறை வருவது முறையல்லது. அவ்வேந்தர் அழிவுற்ற நிலை கூறும் துறை வருவது முறையாகாது. ஆதலாலும், இரு