பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இ. புலவர் கா. கோவிந்தன் வேந்துர் யானைக் கல்லது ஏந்துவன் போலான், தன் இலங்கு இலைவேலே."-புறம் 30, ஆற்றலை நிலை நாட்ட மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சிகளைக் கூறவந்ததே தும்பைத் திணையாதலின், களத்தில் களிற்றையும் கொன்று, அப்போரில் தன் உயிரையும் இழந்த வீரன் மறைவைக் கூறும் களிற் றுடனிலை, அவ்வீரனைப் பாணர் பாராட்டுவதைக் கூறும் பாண் பாட்டு ஆகிய துறைகளையும் இத்திணைக்கு உரியவாகக் கொண்டு "ஒளிற்று எஃகம் படவீழ்ந்த, களிற்றின்கீழ்க் கண் படுத்தன்று" எனவும், "வெண் கோட்டக் களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று!" என அவற்றிற்கு முறையே விளக்கமும் அளிக்கும் பு:வெ. மாலையார் கூற்று அறவே பொருந்தாது என அறிக. அமலை: வேழம் வீழ, வேழத்தோடு வேந்தனும் வீழ்ந்து படுவதும் உண்டு என்பது கொண்டு, அவ்வாறு வீழ்ந்த நிலையை விளக்குவதும், வீழ்ந்தானைப் பாராட்டுவதும் செய்யும் பு:வெ. மாலையார் கொள்கையை ஓரளவு ஏற்றுக் கொண்டு, அந்நிகழ்ச்சியை, ஆசிரியர் தொல்காப்பியனார் தாமும், இத்திணைக்கண் கூறியுள்ளார் என்றாலும், அவர் அதைப் பாராட்டுக்குரிய நிகழ்ச்சியாகக் கொண்டிலர். தன் ஆற்றலை அனைவரும் ஏற்றுப் போற்ற வேண்டும் என்ற ஆணவ மிகுதியால் படையெடுத்து வந்தானின் செருக்கழித்து வென்று புகழ் பெறுவதே தும்பையாம் ஆதலின், அப்போரில் இறந்த ஒருவனை, அதிலும் ஒரு வேழத்தோடு போராடி விழ்ந்த ஒருவனைப்