பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி : 277 ஆனால், நான் அது விரும்பேன்; கொல்லேறு உலா வருகிறது என்று கேட்டே அது உலாவும் மன்றத்தை அணுக அஞ்சுவது போலவும், நல்அரா உறையும் என்பது அறிந்தே, அது உறையும் புற்றை அணுக அஞ்சுவது போலவும், நான் படையுடன் பாசறைக் கண் உள்ளேன் என்பது கேட்டே அரசரெல்லாம் அஞ்சி அடிபணிந்து விடுதல் வேண்டும்; அதுவே என் ஆண்மைக்கு ஒளி தருவதாகும் !" எனக் கூறும் ஒரு மாவீரனை, மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் படைத்துள்ளதும் காண்க. "இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல்லரா உறையும் புற்றம் போலவும், கொல்லேறு திரிதரும் மன்றம் போலவும், மாற்றரும் துப்பின் மாற்றோர் பாசறை உளன் என வெரூஉம் ஒரொளி வலன் உயர் நெடுவேல் என்ஐ கண்ணதுவே." -புறம்:309. இவ்வாறு எண்ணும் பெருவீரன், அந்நிலை தானே வந்து விடாது என்பதையும் உணர்ந்து, அரசர்கள் உள்ளத்தில் அத்தகைய அச்ச உணர்வை உண்டாக்குவன் வேண்டித் தன் நாற்படையை நனி மிகச் சிறந்த வகையில் பெருக்கி வைத்திருப்பதிலும் நாட்டம் செலுத்தியிருந்தான். அதனால், அரசர்களைப் பாராட்ட விரும்பிய புலவர் களும் அத்தகைய படைப் பெருமையைப் பாராட்டு முகத்தான், அவ்வரசர்களின் பெருமை பாராட்டுவதாகக் கருதிப் பாடியுள்ளார்கள். தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய புலவர் அரிசில் கிழார், "பகை வேந்தர்காள்! சேரலாதன் படை வரிசையுள் எத்தனை தேர்கள் உள்ளன ?