பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 ஆ புலவர் கா. கோவிந்தன் எத்தனை குதிரைகள் உள்ளன ? எத்தனை யானைகள் உள்ளன ? எத்தனை வீரர்கள் உள்ளனர் ? எனக் கேட்பீராயின், அவற்றைக் கணக்கிட்டுக் கூறல் எவர்க்கும் இயலாது. ஆதலின் யானும் அவற்றை எண்ணிக் கணக்கிட்டிலேன்; ஆயினும், யான் ஒன்று கூறுவேன்; அதைக் கொண்டு அவன் படைப் பெருமையை ஒருவாறு உணர்ந்து கொள்ளுதல் இயலும். சேரநாட்டில், ஆனிரை மேய்க்கும் தொழிலுடையாராகிய கொங்கர் என்பார் ஒர் இனத்தவர் உள்ளனர்; அவர்களிடம் பெருந்திரளான ஆனிரைகள் பல உள; தங்கள் ஆனிரைகளை ஒன்று சேர்த்து மேயவிடும் வழக்கத்தினராய அக்கொங்கர்கள், அவ்வாறு, அவற்றை ஒன்று கூட்டி மேய விடுங்கால், அவற்றின் எண்ணிக்கையினை எண்ணிக் காண்பது எவர்க்கும். இயலாது. சேரலாதன் படைகள் நான்கும் ஒன்றன்பின் ஒன்று செல்லுங்கால், இரண்டாவதாகச் செல்லும் அவன் களிற்றுப் படைக் காட்சியைக் காண்பார் மனக் கண்முன், அவன் நாட்டுக் கொங்கர்களின் ஆனிரைக் காட்சியே வந்து நழலாடும். அவ்வளவு பெருந்திரளாகச் செல்லும் அவன் போர் யானைகள்; அவன் யானைப் படையே அவ்வளவு பெரியதாயின், அவன் தேர், குதிரை, காலாள் படைகளின் பெருமை எவ்வளவு பெரிதாயிருக்கும் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளுமாறு உங்கள் உள்ளத்திற்கே விட்டு விடுகிறேன்!” என, அவன் நாற்படைப் பெருமையைப் பாராட்டியிருப்பது காண்க. "பண்ணமை தேரும் மாவும், மாக்களும் எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ விலனே, கந்து கோள் ஈயாது காழ்பல முருக்கி உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச்