பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 279 சேண்பரன் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் ஆபரந் தன்ன பல்செலவின் யானை காண்பல அவன் தானையானே.” நலங்கிள்ளியின் பெருமை பாட வந்த புலவர் ஆலந்துர்க்கிழார், "நலங்கிள்ளியின் நாற்படை, பகைநாடு நோக்கிச் செல்லுங்கால், இடை வழியில் ஒரு பனந் தோப்பிடையே நுழைந்து செல்ல வேண்டி நேரின், படை வரிசையின் முதற்கண் செல்லும் துரசிப் படை, அத் தோப்பினுள் நுழையுங் காலம் நுங்குக் காலமாகி அப்படை வரிசையில் உள்ளார் நுங்குண்டு செல்வாராயின், படையின் இடை வரிசைக் கண் உள்ளார் ஆங்கு வருங்காலம், நுங்குக் காலம் கழிந்த பழக் காலமாகிவிடும் ஆதலின், அவர்கள் நுங்குண்ண மாட்டாது. பழமே உண்டு செல்வர். படையின் கடை வரிசைக் கண் உள்ளார், அத்தோப்பை அணுகும் காலத்தில், பழக் காலமும் பழங்காலமாகக் கழிந்து போகப் பனங்கிழங்கு தோன்றும் காலமாகி விடுமா மாதலின் கடைப் படையினர், கிழங்கே உண்டு கழிவர். இவ்வாறு ஒரு பனந்தோப்பினுள் நுங்குக் காலத்தில் நுழைந்த படையின் கடைப்பகுதி, கிழங்குக் காலம் தோன்றிய பின்னரே அத்தோப்பைக் கடந்து செல்லுமளவு நனிமிகப் பெரிது நலங்கிள்ளியின் நாற்படை ' என அவன் படைப் பெருமையைப் பாட்டிடை வைத்துப் பாராட்டியிருப்பதும் காண்க. "தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய, இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக், கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்குநுகர, நிலமலர் வையத்து வலமுறை வளைஇ வேந்து பீடு அழித்த ஏந்துவேல் தானை புறம் 225,