பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 283 கல்லாலும், மலையாலும் காவற் காட்டாலும் அரண் மிகுந்திருந்த ஐம்பெரும் கோட்டைகளையும் அழித்து, அவ்வரச்ர்களையும் வென்று அடக்கி விறு கொண்ட செய்தியைப் பதிற்றுப் பத்து ஒன்பதாம் பத்தின் பதிகம் பாராட்டிக் கூறியிருப்பது காண்க. "வெருவரு தானையொடு மெய்துறச் செய்து சென்று இரு பெருவேந்தரும் விச்சியும் வீழ, அருமிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, பொத்தி யாண்ட பெருஞ் சோழனையும், வித்தை யாண்ட இளம் பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று." சோழர் குலத்து வந்து, காவிரிக்கு அணைகட்டியும், காவிரிப் பூம்பட்டினம் கண்டும், தமிழகத்தின் வளம் பெருக்கித் திருமாவளவன் எனும் புகழ்மிகு பெயர் பூண்ட கரிகாற் பெருவளத்தான், வெண்ணியில் நடந்த கன்னிப் போரில், பனத்தோடு அணிந்து வந்த சேரனையும், வேப்பந்தார் அணிந்து வந்த பாண்டியனையும் ஒரு சேர வென்றழித்த வரலாற்றை, முடத்தாமக் கண்ணியார், பொருநராற்றுப் படையில் வைத்துப் போற்றியிருப்பது காண்க. "இரும் பணம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் ஒருகளத்து அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவ! பொருள். aa-tag. நிலத்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன் தன் பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியைக் கடல்