உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 இ. LIBUSIf ಹT. கோவிந்தன் வகையில், "பகை நாட்டு மக்காள் ! உங்கள் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றேன் நான் என் படை புகும் நாள் இந்நாள்; அந்நாளுக்குள், பகை நாட்டு ஆனிரைகாள்! ஆனிரை இயல்பினராம் அந்தணர்காள்! பெண்டிர்காள்! பிணியுடையீர்காள்! ஆண் மக்கட்பேறு பெறா ஆடவர் காள்! போர் நிகழ் இடம் பெயர்ந்து புகலிடம் தேடிப் போய் விடுங்கள்!" எனப் பறையறைந்து அறிவிப்பதைக் கடமை யாகக் கொண்ட பண்பாடு மிகுந்த பழந் தமிழ் நாட்டில், போர் வெறி அளவிறந்து பெருகிவிட்ட காரணத்தால் பகைவரின் பச்சிளங் குழந்தைகளைக் கைப்பற்றிக் கொல்லவும், பகை நாட்டு அரசவையிலிருந்து வந்தவர் என்பதற்காகவே, பாடிப் பிழைப்பதல்லது வேறு பழிமிகு தொழில் புரிந்தறியாப் புலவர் பெருமக்களைக் கொல்ல நினைப்பதும், பகைவரின் குலமகளிரை, மயிர் களைவது போலும் கொடுமைக்கு உள்ளாக்குவதும் ஆகிய இழி முறைகளும் இடம் பெறலாயின. தானும் ஒரு புலவனாய்ப் பதின்மருக்கு மேற்பட்ட புலவர் பெருமக்கள் பாராட்டத்தக்க புரவலனாய்த் திகழ்ந்த குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், போர் வெறி கொண்டுவிட்ட காரணத்தால், தன்னைப் போலவே புலவர் பலர் தம் பாராட்டைப் பெருமளவு உயர்ந்த பண்பாடுடையவனும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாக வைத்து மதிக்கத் தக்க மாண்புடையவனும் ஆகிய மலையமான் திருமுடிக் காரியின் முள்ளூர் மலையரணை முற்றியழித்ததோடு அமையாது, அவன் விட்டுச் சென்ற, அவனுடைய இரு பச்சிளங் குழவிகளைக் கைப்பற்றிக் கொண்ர்ந்து, தன் பட்டத்து யானையின் காலின் கீழிட்டுக் கொல்லவும் துணிந்த கொடுமை, புலவர்