பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 293 திருந்த காரணத்தால், அவற்றைக் காட்டியே அவர்களின் போர் வெறியைத் தணிக்க முயன்றுள்ளார்கள். கொடுமுதலைகள் கூடி வாழ்தற்கேற்ற ஆழமும் அகலமும் கொண்ட அகழியாலும், செம்பை உருக்கி வார்த்து எடுத்தாலொத்த திண்மை வாய்ந்த மதிலாலும் வளைப்புண்டு அழிக்கலாகா ஆற்றல் மிக்க அரனையும் எளிதில் அழிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த கிள்ளி வளவன், சேரர் தலைநகராம் கருவூரைக் கைப்பற்றக் கருதினான்; உடனே சோழர் பெரும்படையொன்று சேரநாடு புகுந்து கருவூரை வளைத்துக் கொண்டது. சோழன் வரவுணர்ந்த கருவூர்க் காவலன், அரண் வாயிலை அடைத்துக் கொண்டு அகத்தே அடங்கி விட்டான்; முற்றுகை நெடிது நாள் நீளலாயிற்று; சினங் கொண்ட சோழர் படை, கோட்டையைக் கொன்னே வளைத்துக் கொண்டிருக்க விரும்பாது, கருவூரைச் சூழ உள்ள காவற் காட்டினுள் புகுந்து, காவற் காட்டு மரங்களை வெட்டி வீழ்த்துவதில் முனைந்தன. அப்போதும் அகத்தோன் புறம்போந்து போரிடத் துணிந்தானல்லன்; கிள்ளிவளவனும் முற்று கையைக் கைவிட்டானல்லன். இரு பேரரசர்களிடையே தோன்றிவிட்ட பகையுணர்வையும், அதன் பயனாய் உருவாகிய கருவூர் முற்றுகையினையும் கிள்ளிவளவன் அவைப் புலவராகிய ஆலத்துார்க் கிழார் உணர்ந்தார். கருவூர்க் கோட்டையின் கவினையும், அக்கருவூரைச் சூழ்ந்தோடும் ஆன்பொருநை ஆற்றின் தூய வெண்மணற் பரப்பில் காற்சிலம்பு ஒலிக்க ஓடிவந்தமர்ந்து, கைவனை ஒலிக்கப் பொற்கழங்கினை உருட்டி ஆடி மகிழும் கருவூர் மகளிரின் மாண்பினையும் கண்டு கண்டு களித்தவர் புலவர் ஆலத்துர்க் கிழார். அக்காட்சி நலங்களைக் கண்டு களித்த