பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இ. புலவர் கா. கோவிந்தன் அவர்க்குக், கருவூர் முற்றுகையால் சேரநாட்டு மக்களை அடைய இருக்கும் சீர் கேடும், கருவூரும், அந்நகருக்கு ஒரு பால் அரணாகச் சூழ்ந்து ஒடும் ஆன் பொருநையும் பெற இருக்கும் பெருங்கேடும் பெருந்துயர் தருவவாயின. வா இருக்கும் அவ்வழிவினைத் தடுத்து அழிக்கத் துடித்தது அவர் உள்ளம். கருவூரை வளைத்து நிற்கும் படைக்குத் தலைவனாய்ப் பாசறைக்கண் வீற்றிருக்கும் கிள்ளிவளவன் பால் சென்றார் புலவர். அவனோ கருவூர் அழிவு கண்டு மகிழும் ஆர்வத்தில் திளைத்து நிற்கின்றான். அந்நிலையில், கருவூர் மாநகர்க்கும் மக்களுக்கும் அவனால் வர இருக்கும் அழிவின் கொடுமையினை எடுத்துக் காட்டி வருந்தித் தடுத்தல் இயலாது போயிற்று, அதனால், தாம் எண்ணியதை முடிக்க, வேறு ஒரு புது முறையினைச் சிந்திக்கத் தொடங்கினார்; அதன் பயனாய், மன்னன் மனம் உவக்கும் 'உரை வழங்கினால் உறுபயன் உண்டாம்; இந்நிலையில், அவன் மனம் உவக்கும் உரை, அவன் காது குளிரும் வகை; அவன் பகைவர் மீது வழங்கும் பழியுரைகளே ஆகும். அவ்வாறு பகையரசரைத் தம் முன் பழித்துரைப்பார்க்கு, அரசர்கள், அவர் விரும்புவன எல்லாம் வழங்குவர்; மன்னர்களின் மன இயல்பு அதுவாகும் என்ற தெளிவு பிறந்தது. உடனே, ஆலத்தூர்க் கிழார் வளவனைப் பார்த்து, “அரசே! அரசர்கள், தம் மொத்த ஆற்றல் வாய்ந்த அரசர்களோடு போர் புரிவதையே விரும்புவர்; அதுவே அவர்தம் வீரத்திற்கும் அழகும், அறிவுடைமையுமாம். தமக்கு நிகரில்லாதாரோடு போர் தொடுத்துப்போதல் அவர்க்குப் புகழாகாது: மாறாக, மாபெரும்பழியாம். இவ்வுண்மை நீ அறியாத தொன்றன்று. ஆனால், இன்று நீ அவ்வறிவிழந்து நிற்பது காண