பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 33 உணவுக் குறைபாடுற்றுப் பசியான் வருந்திய பாலை நிலத்து மறவர், தம் பசி போக்க மேற்கொண்ட ஒழுக்கமே திரை கோடல் என்ற பண்டை நிலை மாறிப் பகைவர் நாட்டுப் பசுநிரைகளை அந்நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல விரும்பும் அரசன் கைப்பற்றிச் செல்வதே வெட்சியாம் என ஆயிற்று எனினும், பக்கத்தில் உள்ளோர் பொருளைப் பசித்தவர் வலிதிற் பற்றிக் கொள்வதே வெட்சியாம் என்ற அதன் உண்மை இயல்பில் சிறிதும் மாறவில்லை. செம்மறியாட்டுக் கிடாயின் இரு கொம்புகள் போல் சுருண்டு, பிடரி மறையத் தொங்கும் தலைமயிரும், செம்மை நிறம் மாறாக் கண்களும் கொண்டு கண்டார் அஞ்சும் உருவம் வாய்க்கப் பெற்று, ஆறலைத்து வாழும் வாழ்க்கை மேற்கொண்டு, கைந்நிறையப் பொருள் கொண்டு, காட்டு வழியைக் கடந்து போவாரை எதிர்நோக்கிக் கூரிய அம்பேந்திய கையினராய்க் காத்துக் கிடந்து, அவ்வழி வருவார் ஏழை எளியார் யாவரேயாயினும் அனைவரை யும் கொன்று, அவர்பால் உள்ள சிறு பொருளையும் கொள்ளையிட்டுக் குடியோம்பியும், தம் வறுமை வாடாமையால், அண்டை நாடுகளுள் புகுந்து அந்நாட்டு ஆனிரைகளை, அவற்றைக் காத்து நிற்கும் காவல் வீரர்களைக் கொன்று உயிர் போக்கிக் கவர்ந்து வந்து வறுமை தீர்ந்து வளங்கண்ட தமிழகத்து மறவர் வரலாறும், வலித்துக் கட்டிய வில் நாணில் பூட்டிவிடும் அம்புகள் விர்ர் எனும் ஒலி எழுப்பியவாறே விரைந்து வெளிப்பட, காட்டுக் கொடு விலங்குகளும் கண்டு அஞ்சும் வேட்டை நாய்கள் பின் தொடர்ந்து வர, கேட்டாரை நடுங்கப் பண்ணும் பம்பைப் பறையினை முழக்கிக் கொண்டு பக்கத்து ப.த.போ.நெ-3