பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 39 நீங்காக் கடமையாம் என்றும் அரசர்கள் எண்ணுதல் வேண்டும். பண்டு பாராண்ட பைந்தமிழ் நாட்டுப் பேரரசர்கள் இப்பேர் உண்மையினை உணர்ந்து அதற்கு ஏற்ப நடந்து வந்தார்கள். வேந்தே! உன் வெற்றி மிகு வாழ்விற்கு வழிகோலியவர் நின் படை வீரராவர். ஆதலின் அவர்கள் நல் வாழ்வில் நீ என்றும் நாட்டம் உடையை யாதல் வேண்டும். நெல்விளை நன்செய்களில் கதிர் உண்ண வந்து படியும் பறவைகளை ஒட்டிக் காவல் புரிந்திருப்போர் பசிவந்து வருத்தக் காவலைக் கைவிட்டு வீடு சென்று விடாது, அணித்தாக ஒடும் உப்பங்கழியில் கொண்ட மீனைப் பனங்கருக்குத் தீயில் தீய்த்து உண்டும், கையோடு கொண்டு சென்றிருக்கும் புதிய கட்டெளிவைக் குடித்தும் பசி தீராதாயின் தெங்கிளங் காய்களை வேண்டுமட்டும் உதிர்த்து வெட்டிப் பருகிப் பசி தீர்ந்து மகிழ்தற்கு வாய்ப்பளிக்கும் வளநாடுகளை, அவ்வீரர்களின் உடைமை யாக்குக! அப்பெரு வாழ்வு வாழும் அவர்கள், உன்மறதி காரணத்தால், நான்கே கால்கள் நடப்பெற்றுத் தழை இட்டு வேயப்பட்ட சின்னம்சிறு குடிசை வாழ்வினராகி வருந்த “நெல்வினை கழனிப் படுபுள் ஒப்புநர் ஒழிமடல் விறகில் கழிமீன் சுட்டு வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு - பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள் பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்துக், கூவை துற்ற நாற்கால் பந்தர்ச் சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு உதவியாற்றும் நண்பின் பண்புடை ஊழிற்றாக நின் நீர்மை" -புறம்: 29