பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இ புலவர் கா. கோவிந்தன் நேர்ந்து விடாவாறு, பொருள் வேண்டி உன்னை நாடி வருவார்க்கும் தாமே தம் பொருள் வழங்கி அவர்கள் வறுமை போக்கி வழியனுப்பும் வளமார் வாழ்விலேயே அவர்கள் என்றென்றும் இருக்கும் வண்ணம் உன் அரசியல் முறைகளை வகுத்துக் கொள்வாயாக!” எனப் புலவர் புகன்ற பொன்னுரையின் வழிநடந்து பொலிவு பெற்றான் சோழன் நலங்கிள்ளி, என்ற புறநானூற்றுச் செய்தியினையும் ஈண்டு நினைவு கூர்க. நிற்க. தன் படை வீரர்களை, இவ்வாறு பெரு வாழ்வில் வைத்துப் புரத்தற்காம் பெருஞ் செல்வத்தினை, அரசன், தன் நாட்டிற்குள்ளேயே பெற இயலாதாயின், அப் பொருளைப் பிற நாடுகளிலிருந்தேனும் பெறுதல் வேண்டும், இஃது அரசன் கடமை. அவன் அக்கடமையை மறந்து, தன் படையினருக்கு வேண்டும் பொருள் அளித்துப் பேணத் தவறின், படையாளர் அமைதி யிழந்து போவர். அமைதி இழந்த படை, தன் அரசனையே எதிர்த்து எழுதலும் கூடும். ஆகவே, அந்நிலை உண்டாகா வண்ணம், அரசன், படையாளர் சிந்தையினை வேற்று நாட்டுச் செல்வங்களைக் கவர்ந்து வருதற்கண் திருப்பி விடுதல் வேண்டும். . அக்கால அரசர்கள், இவ்வுண்மையைக் கடைப் பிடித்து ஒழுகி வந்தார்கள். அதனாலேயே, அண்டை நாடுகளோடு ஓயாது போர் தொடுத்து வந்தார்கள். ஆகவேதான், தன் படை வீரன் போருக்குத் தயாரா கின்றான் என்பது உணர்ந்த அரசன், அவனைப் பகைவர் நாட்டுப் பசுநிரைகளைப் பற்றிக் கொணருமாறு பணித்தான் என்கிறது. அப்புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுள். தன் பேராண்மையினைப் பிறர் கண்டு