பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இ புலவர் கா. கோவிந்தன் "யாம் தன் இரக்கும் காலைத் தான் எம் உண்ணா மருங்குல் காட்டித் தன்னுர்க் கருங்கைக் கொல்லணை இரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே, பூம் ல வாட்படையும் விற்படையும் உடையராய் விரைந்து சென்ற வெட்சியார், ஆனிரைகளைக் காத்து நின்ற கரந்தையாரை வென்று துரத்திவிட்டு, அவ்வானிரை களைக் கைப்பற்றிக் கொண்டு, காட்டு வழியே ஒட்டி வருங்கால், இடைவழியில் தம் பசிநோய் மிகவே, அவ்வானிரையுள் கொழுத்த ஆவொன்றைக் கொன்று அதன் ஊனை நெருப்பிலிட்டுப் புழுக்கி, வேம்பின் நீழற்கண் இருந்து உண்டு செல்வராயினர் எனக் கூறும் அகநானூற்றுச் செய்யுளும், "வய வாள் எறிந்து வில்லின்நீக்கிப் பயநிரை தழிஇய கடுங்கண் மழவர் அம்பு சேட்படுத்து வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பின் கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் புலவுப் புழுக்கு உண்டவான்கண் அகல் அறை"-ஆக 309 - வடித்துக் கூராக்கிய அம்பும், நாணேற்றி வளைந்த வில்லும் உடையராகிய வெட்சி வீரர், கண்டவர் அஞ்சிக் கலங்குமாறு வளைத்து வில்லிலிருந்து விரைந்து பாயும் அம்புகளின் துணையால், பகை நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றி வருங்கால், இடைவழியில் வந்தெதிர்த்த ஆனிரை ஒம்பும் கரந்தை வீரரை, ஆகோட் பறை ஒலிக்க வென்று துரத்திய வெற்றிக் களிப்பால் வாகை அணிந்து, இடை வழியில், உமணர் எனும் உப்பு வணிகர் மூட்டி விட்டுச் சென்ற கல் அடுப்பில் ஊனை அவித்து உண்டு