பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 & புலவர் கா. கோவிந்தன் ஆகவே, கரந்தை ஒழுக்கத்தில் "விரிச்சியும்", "வேயும்" இடம் பெற்றில; அவ்வொழுக்கத்திற்கு அவை ஏவாதன என்றே கோடல் வேண்டும். நிரைகொண்ட வெட்சிவீரர், தமக்கு வெற்றி தந்தவள், தங்கள் பாலைநிலத் தெய்வமாம் கொற்றவையே என உணர்ந்து அவளுக்குப் பரவுக்கடன் கொடுத்து விழாக் கொண்டாடல் கண்ட கரந்தையாரும், தமக்கு வெற்றி வேண்டித் தெய்வத்தை வழிபட விரும்புவராயினர். அவ்வாறு, விரும்பிய ஆயர், அப்போது தாம் நிற்பது குறிஞ்சி நிலத்தின் கண் ஆதலாலும், தாமும் நிரையும் ஆண்டு முழுவதும் இருந்து வாழவேண்டிய இடம், அந்திரைக்கு வேண்டும் புல் உணவு அளிக்கும் குறிஞ்சி நிலமே ஆதலாலும் வெட்சியாரோடு போரிடவேண்டிய இடமும் அக்குறிஞ்சியே ஆதலாலும், முருகனையும், அவன் மனைவியும் அக்குறிஞ்சி நிலமகளும் ஆகிய வள்ளியையும் வழிபடுவாராயினர். ஆகவே, அவ்வழிபாட்டைக் கூறும் “காந்தள்,” “வள்ளி” என்ற இரு துறைகளும் கரந்தைத் திணைக்கு உரியவாயின. வந்த நிலத்தின் கடவுளர் இருவரை வாழ்த்தி வழிபட்ட ஆயர், தங்கள் நிலமாம் முல்லைநிலக் கடவுளாம் மாயோனை மறந்தாரல்லர், மறவர் வலைப்பட்டு மாண்டு போக இருக்கும் கறவைகளைக் காக்க விரையும் கோவலர், குன்று எடுத்து, கன்று காலிகளைக் காத்த கண்ணனை வழிபட விரும்புவது இயல்பேயன்றோ? அதனால், நிரைமீட்கச் செல்லுங்காலும், நிரைமீட்டு வருங்காலும், தம் முல்லை நிலத்து எல்லைக் கண் மலர்ந்து மணம் நாறும் காயாம் பூவைக் கண்டதுமே, அக்காயாம் பூ நிறத்தனாகிய கண்ணன் அருள் நினைந்து, அவனை வணங்கி வாழ்த்துவா