பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ 81 அழிவிற்கு உள்ளாகாது நிலை பெறுவதில் நாட்டம் செலுத்துவதும், இன்றியமையாதனவாயின. ஆக, நாடு குறித்த போர் ஒன்றில், காட்டைக் காத்து நிற்கும் காவற்படையும் அந்நாட்டைக் கைப்பற்றுவது குறித்து வந்திருக்கும் நாற்படையும் முறையே பெரியவும் சிறியவுமாக அமைவதன் விளைவால் அக்காடு அழிவின்றி நின்று அந்நாட்டு அழிவின்மையினைப் பறைசாற்றுவதும் அதற்கு மாறாக அவ்விரு படைகளும் முறையே சிறியவும் பெரியவுமாக அமைவதன் விளைவால் அக்காடு அழிவுற்று, அந்நாட்டழிவைப் பறைசாற்றுவதும் கண்கூடாம். அந்நிலையில் தன் நாட்டைச் சூழ அமைந்திருந்த காடு அழிவுற்றுத் தன் படைச் சிறுமையினையும் பகைப் படைப் பெருமையினையும் புலப்படுத்தி, பகையொழித்துப் பணிந்து போவதே அறிவுடைமை என அறிவுறுக்கும் நிலை வந்துற்றபோதும், தன் ஆண்மையில் கொண்டுள்ள அழியா நம்பிக்கையால், காடு கூறுவதைக் கருதாது, தன் சிறுபடையொடு, தான் ஒருவனாகவே சென்று, பகைவர் தம் பெரும் படையைப் பாழாக்குவோனே வீரன் எனும் பாராட்டிற்கு உரியவனாவன். அத்தகைய பெருவீரர்கள் பலர் பண்டு வாழ்ந்திருந்தமையால், அவர்கள் அவ்வாறு உன்னம் போலும் பன்மரங்களால் நிறைந்த தம் காடுகள் அழிந்து தம் படைச்சிறுமையினைப் புலப்படுத்திய போதும் அதைப் பொருட்படுத்தாது, போர். மேல் சென்றதைக்கூற எழுந்ததே உன்ன நிலையாம். இவ்வாறு தன் படைப் பெருமையால் தழைத்தே நின்று ஆக்கத்தையும், தன் படைச் சிறுமையால் பகைவர் மூட்டிய தீயிடைப்பட்டுக் கரிந்து நின்று கேட்டையும் உணர்த்திய உன்னத்தின் தொல்லியல் கெட்டுப், பிற்காலத்தில் நிமித்தம் உணர்த்துவதாகக்