பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் பேர் நெறி 87 "காயமீன் எனக் கலந்து காணிரை மேயவெந்தொழில் வேடர் ஆர்த்து உடன் பாய மாரி போல் பகழி சிந்தினார்; ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்." -சிந்தாமணி, 421 என வரும் சிலப்பதிகார - சிந்தாமணிச் செய்யுட்களும் இக்கருத்தினையே வலியுறுத்தி நிற்றல் உணர்க. நிரைகோடலும், நிரை மீட்டலும் பண்டு தோன்றிய முறை இதுவே. ஆனால், காலம் செல்லச் செல்ல, அவற்றிடையே சிலபல மாறுதல்கள் இடம் பெறலாயின. பாலை நிலத்து மறவரே நிரைகொள்வர்; அவ்வாறு அவர் கொள்ளும் ஆனிரை, அப்பாலையை அடுத்துள்ள முல்லை நிலத்து ஆயர்க்குரிய ஆனிரையே; பாலை நிலத்து மறவர் கைப்பற்றிச் சென்ற ஆனிரையை மீட்டுக் கொணர்வார் முல்லை நிலத்து ஆயரே என்ற நிலை மாறிற்று. தனக்குப் பணியாத நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதை அறிவிக்கும் வாயில்களுள் ஒன்றாகத் தன் படையினை ஏவி, அப்பகை நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொணர் வதும், அவ்வாறு, அவ்வரசன் வீரர் கைப்பற்றிச் சென்றனர் தன் நாட்டு ஆயர்களின் ஆனிரைகளை என அறிந்த அப்பகை நாட்டு அரசன் தன் படை வீரரை ஏவி, அவ்வானிரைகளை மீட்டுக் கொணர்வதும் வழக்கமாகி விட்டன. இவ்வாறு, அரசர் இருவர் பகைத்து நின்று, நிரைகோடலும், நிரை மீட்டலும் மேற்கொண்டதை, முறையே வெட்சி ஒழுக்கம் எனவும், கரந்தை ஒழுக்கம் எனவும் பெயரிட்டுப் பாடல் புனைந்து பாராட்டு வாராயினர் புலவர்களும். - நிரைகவர்தலும், நிரை மீட்டலும் முறையே சென்று தாக்குவாராலும், நின்று தாக்குவாராலும் தத்தம் போர்