பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 93 பகை நிலத்தே சென்று களவினாலே ஆனிரையைக் கொண்டு போந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்து” என நச்சினார்க்கினியரும் பொருள் கூறி யுள்ளனர் என்றாலும், களவின் ஆதந்து ஓம்பல்” என்ற தொடரில் உள்ள களவின்' என்பதை வினையடை யாக்கிக், களவினால் எனப் பொருள் கொண்டு, தந்து, என்ற வினையொடு கூட்டி, நிரைகவர்வார் தொழில் உணர்த்து வதாகக் கொள்ளாது. அதைப் பெயரெச்ச அடையாக்கி, ஆ என்பதோடு கூட்டித் திருடப்பட்ட பொருளைத், திருடர் தொழிலை, அவரால் திருடப்பட்ட பொருள் மீது ஏற்றித் திருட்டுப் பொருள் என வழங்கும் வழக்குப்போல், களவின் ஆ என்பதற்குக் களவாடப்பட்ட ஆ எனப் பொருள் கொண்டு, தந்து ஓம்பல் நிரைமீட்பார் தொழில் உணர்த்துவதாகக் கொள்வதே, இயல்பான பொருள் கோள் நெறியாகும். ஆகவே, வெட்சியைக் குறிஞ்சிப் புறம் என்பதற்குக் குறிஞ்சித் திணையின் அகவொழுக்கமாகிய களவொழுக்க ஒருமைப்பாட்டினைக் காரணம் காட்டுவது பொருந்தாது. ஆனிரைக்கு உரிய ஆயர் முல்லை நிலத்தவரே யாயினும், அவர் அந்நிலத்திலேயே வாழ்ந்திருப்பாரல்லர். தம் ஆனிரைகள், தாம் வேண்டும் தழை உணவினை வேண்டுமளவு உண்டு மகிழுமாறு, அவற்றை அத்தழை யுணவு பெருமளவில் கிடைக்கும் குறிஞ்சி நிலத்தே கொண்டு சென்று மேய்த்து அவ்வானிரைகளோடு ஆண்டே வாழ்வாராவார். பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலிமுனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கி" (நெடுநல் வாடை 2-5) என்ற தொடர் பொருளினையும் காண்க. ஆகவே, ஆனிரைகளைக்