பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 131

இந்திரசித்து அதுமனை மலரவன் கணையால் பிணித்துத் தெருவழியே இழுத்துச் செல்லுகின்றான். அப்பொழுது அரக்கர்கள் திரளுகின்றனர். அவர்கள் அநுமனை என்ன செய்யவேண்டும் எனப் பலர் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்" ஆனால் அரசனைப் பற்றியோ, ஆட்சியைப்பற்றியோ, அல்லது அரசன் செயலைப்பற்றியோ யாதொன்றும் காணப்பெறவில்லை. சீதாப்பிராட்டியைச் சிறையிட்டதால்தான் இவ்விளைவுகள் யாவும் நேரிட்டன என்று ஒருவர்கடப் பேசவில்லை. இராவணன் சீதையைச் சிறையிட்டது பலருக்கு உடன்பாடாக இருந்திருக்கலாம்; அல்லது அரசனது ஆணைக்குப் பயந்து வாய்மூடிமெளனிகளாகவும் இருந்திருக்கலாம்.

அநுமனால் எரியுண்ட இலங்கையைத் தெய்வதச்சன் புதுப்பித்த பிறகு இராவணன் மந்திராலோசனை சபையைக் கூட்டுகின்றான். இதில் தனக்கு வேண்டியவர் களைமட்டிலும் வருவித்து, பிறரையெல்லாம் புறத்தே போக்கி விடுகின்றான். அவையின்கண் ஒருவரும் வாராதிருக்க காவலாளர்களை நிறுத்துகின்றான். குரங்கினால் மிகவும் அவமானம் அடைந்ததற்கு மிகவும் மனம் வருந்திக் கூறுகின்றான். வீடணனைத்தவிர, ஒருவராவது இராவணனது தவற்றை எடுத்துரைக்கவில்லை. ஆனால் கும்பகருணன் மட்டிலும் பிறன்மனை நோக்கிய அன்றே அரக்கர் புகழ் அழிந்துவிட்டது என்றும், கெளரவத்தின் காரணமாகச் சீதையைத் திரும்பக் கொண்டு விடுதல் தம்முடைய எளிமையைப் புலப்படுத்திவிடும் என்றும், இவ்வாறு செய்வதைவிட போரில் இறந்து படுதலே தக்கது என்றும் எடுத்துரைக்கின்றான். இவற்றையெல்லாம்

47. கந்தர. பிணிவிட்டுப் - 3.4