பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

"அந்தப் பெண்மணி என் தந்தையின் மாளிகையை அடைந்தபொழுது என்னை எழுப்பினாய்; ஆதலால் அக்கனவு முடியவில்லை” என்று திரிசடைசொல்ல, பிராட்டி, அன்னையே, இன்னமும் உறங்கி அக்கனவின் மீதியையும் காண்பாயாக’ என்று தன் ஆர்வத்தைப் புலப்படுத்தி தன் இருகைகளையும் கூப்பித் தொழுதாள்.

கனவுகள் யாவும் மனத்தில் எழும் தோற்றங்களே. ஆகவே, மனத்தைப்பற்றி உளவியலார் கொண்டுள்ள சில கருத்துகளை ஈண்டுக் காட்டுதல் பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன். மாக்டுகால் என்ற உளவியலறிஞர் மனிதனிடம் தோன்றும் உந்தலைப் (Drive) பதினான்கு என்று கணக்கிட்டுப் பேசுவர். இவற்றுள் தலையானவை இரண்டு. ஒன்று, தன்னைக் காத்துக் கொள்ளும் ğusuu kas b. (Instinct of self-preservation) (2 öğso sraörı 1ğı அண்மைக் காலத்துக் கலைச் சொல்). இது பசியால் வெளிப்படும் உந்தல். மற்றொன்று, கால்வழியைக் காத்துக் G&rréré5 b @uäù géæ;ib (Instinct of race-preservation). இது பாலுணர்ச்சியால் வெளிப்படும் உந்தல். இது காம உணர்ச்சி. காமமும் பசியும் மனிதனின் குடுமியைப் பிடித்து ஆட்டும் மாபெரும் ஆற்றல்களாகும். பசி பிறந்த நாள் தொட்டுக் காடுபோகும் இறுதிநாள்வரை இருந்து வருவது; காம உணர்ச்சி குமரப் பருவத்தில் தோன்றி இந்தக் கட்டை போகும் இறுதிநாள்வரை இருந்து வருவது. இவை இரண்டும் மனிதனைச் சமைக்கும் நித்திய நெருப்புகள். இவை இரண்டும் மனிதனுடைய அடுப்பாக மட்டுமின்றி விறகாகவும் இருந்து வருகின்றன. மனிதன் இவற்றில் பக்குவப் படுங்கால் இவற்றால் கருகி விடாமல் காத்துக் கொள்வதில்தான் அவனுடடைய வாழ்க்கைப் போராட்டம் அடங்கியுள்ளது. மனிதன் அவற்றில் இல்லை;