பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இவ்வாறு வளர்ந்தவன் தனது வலக்கையைத் தூக்கி "இதனைக் காண்பாயாக' என்று காட்டுகின்றான். “விற்படை முதலிய கொடிய ஆயுதங்களையெல்லாம் வலிமையோடு இயக்கும் பயிற்சி பெற்றுள்ளாய் இருபது கைகளைப் பொருந்தியவனாக இருக்கின்றாய். போராடுவதில் என் எதிரே நில்லு பார்ப்போம்” என்று சொல்லி பெருநெருப்பு போன்ற வெப்பத்துடன் பெருமூச்சு விடுகின்றான்.

பின்னும் கூறுவான்: "மிக்க பராக்கிரமத்துடன் என் எதிரே நிற்கின்றாய். இது நிலைத்து நிற்காத நிலையே. வாளினால் காட்டும் நின் ஆண்மையும், மேலேழ் கீழேழ் என்ற எல்லா உலகமும் ஒருங்கு அழியுமாறு செய்யும் நின்வலியும், மேலும் மேலும் முயன்று செயலாற்றுதலும், எவரும் ஒப்பாகாத தனிப்பட்ட ஆண்மையும், நின்தோள் வலியும் ஆகிய இவற்றை உன்னுடைய புகழுடன் ஒரு குத்தில் ஒழித்து விடுவேன்; இனி பின்வாங்காமல் குரங்கினுடைய ஒற்றைக் கையினால் புடைக்கின்ற குத்தைத் தாங்க வல்லாயோ? என்னுடைய தோள் வலியினால் என் ஒற்றைக் கையைத் துக்கியான் குத்தவும் இறவாமல் நின்றாயே யானால், நீ பின்பு என்னை உன்னுடைய தல வரிசைகளினால் வலிமையோடு குத்துவாய். அத்தக் குத்தின் விசையால் நான் இறவாவிடினும் உன்னோடு எதிர்ந்துப் பொரேன்"- என்பது அதுமனின் வீரவாதம். வீரவாதம், சூளுரை, நெடுமொழி ஆகியவை ஒரே

பொருளையுடையன.

இராவணன்: இராவணன் அதுமனை மிகவும் கொண்டாடிப் பேசுகின்றான்: "வலியோனே, வீரருக்குத் தக்கவற்றையே கூறினாய். நிகரற்ற தனிப்பட்ட என் எதிரே உன்னையின்றி பிறர் நிற்பவரும் உளரோ? என்னை